அடுத்த ஆபத்து.. இந்த 22 மாவட்டங்களில் அதிகரிக்கும் கொரோனா.. வார்னிங் தந்த மத்திய சுகாதாரத்துறை..!
22 மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது
சென்னை: இந்தியா முழுவதும் 22 மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
நாட்டில் கொரோனா 2வது கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கியது.. அப்போதிருந்து இப்போதுவரை பீதியை கிளப்பி கொண்டிருக்கிறது.
முதல் அலையைவிட 2வது அலையில்தான் ஏராளமான உயிரிழப்புகளை சந்திக்க நேர்ந்தது.. இதற்கு முக்கிய காரணமாக ஆக்ஸிஜன் தட்டுப்பாடு அமைந்தது..

கட்டுப்பாடுகள்
இதற்கு பிறகுதான் அந்தந்த மாநில அரசுகள் ஏராளமான விதிமுறைகளையும், கட்டுப்பாடுகளையும் கொண்டு வந்தன.. தற்போது தொற்று பரவல் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது.. பொதுமக்களும் நிம்மதி பெருமூச்சு விட்டு வருகின்றனர்.. ஆனால் அதற்குள் 3வது அலை பரவல் குறித்த டாக்டர்களின் எச்சரிக்கைகள் பீதியை கிளப்பி கொண்டிருக்கிறது.

3வது அலை பரவல்
அநேகமாக இன்னும் ஒரு சில வாரங்களில் 3வது அலையை இந்தியா எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என மத்திய, மாநில அரசுகளும் தெரிவித்து வருகின்றன... இதனால் முன்கூட்டியே எச்சரிக்கை பணிகளில் அரசுகள் தீவிரமாகி கொண்டிருக்கின்றன.. இப்படிப்பட்ட சூழலில், இந்தியாவில் 22 மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிர்ச்சி அளிக்கும் வகையில் அதிகரித்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

பேட்டி
மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் செய்தியாளர்களிடம் பேசும்போது, "நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு 132 நாட்களுக்கு பிறகு 30 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது... அதேசமயம் 22 மாவட்டங்களில் மட்டும் கொரோனா தினசரி பாதிப்பு 100க்கும் கீழ் பதிவாகியுள்ளது.. இதில் 7 மாநிலங்களில் உள்ள 22 மாவட்டங்களில் கொரோனா தொற்று சற்று அதிகரித்து காணப்படுகிறது.

கேரளா
கேரளாவை பொறுத்தவரை 7 மாவட்டங்களில் கொரோனா தொற்று உயர்ந்துள்ளது... ஆலப்புழா, கோட்டயம், மலப்புறம், திருச்சூர், வயநாடு, எர்ணாகுளம், பத்தனம்திட்டா ஆகிய ஏழு மாவட்டங்களில் கொரோனா பாதிப்புகள் அதிகமாகவே காணப்படுகிறது.. கேரளத்தில் பத்து மாவட்டங்களில் கொரோனா பாசிட்டிவ் விகிதம் 10 சதவீதமாக உள்ளது..

விவாதம்
கொரோனா குணமடைந்தோர் விகிதம் 97% ஆக உயர்ந்த நிலையிலும் தற்போது கொரோனா பரவல் என்பது சற்று அதிகரித்தே காணப்படுகிறது. கொரோனா அதிகரித்துவருவதால் மாநில அரசுடன் இதுகுறித்து விவாதித்துள்ளன.. கொரோனா அதிகரித்துவரும் மாவட்டங்களில் எக்காரணத்தை கொண்டும் தளர்வுகள் ஏற்படுத்தக்கூடாது" என்றார்.

தொற்று பாதிப்பு
கேரளாவை பொறுத்தவரை இந்த நிமிடம் வரை அங்கு தொற்று குறையவே இல்லை.. கடந்த 25-ம் தேதி மட்டும் ஒரே நாளில் அங்கு 17,466 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.. 26-ம்தேதி 11,586 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.. நேற்றைய தினம், 22,129 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இது மிக அதிக எண்ணிக்கையிலான பாதிப்பு ஆகும்... இப்போதைக்கு அங்கு 1,45,371 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.. ஒரே நாளில் 156 பேர் உயிரிழந்துள்ளனர்..

எச்சரிக்கை
இதையடுத்து மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 16,326 ஆக உயர்ந்துள்ளது... இப்படிப்பட்ட சூழலில், கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகை அடுத்த மாதம் கொண்டாடப்பட உள்ளது... கொரோனா அதிகரித்து கொண்டே போவதாலும், மத்திய அரசு சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாலும், கடந்த வருடத்தை போலவே இந்த முறையும் ஓணம் பண்டிகை கடுமையான கட்டுப்பாட்டுகளுடன் கொண்டாடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications