சரியாக குறி வைத்த மோடி.. "கொரோனா ஹாட்ஸ்பாட்" என்றால் என்ன?.. தமிழகத்தில் எங்கெல்லாம் இருக்கிறது?
இந்தியாவில் ஹாட்ஸ்பாட் பகுதிகளில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரமாக இருக்கும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
டெல்லி: இந்தியாவில் ஹாட்ஸ்பாட் பகுதிகளில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரமாக இருக்கும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். தமிழகத்தில் முக்கியமான சில மாவட்டங்கள் ஹாட்ஸ்பாட் மாவட்டங்கள் என்று அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
Recommended Video
இந்தியா முழுவதும் மே 3 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் ஹாட்ஸ்பாட்களில் அதிக அளவில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஹாஸ்பாட் பகுதிகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.அங்குதான் கொரோனா தீவிரமாக பார்வை வருகிறது. இதை கட்டுப்படுத்த வேண்டும். இல்லையென்றால் புதிதாக ஹாட்ஸ்பாட் பகுதிகள் உருவாகும். இதை தடுப்பதுதான் எங்கள் நோக்கம், என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ஹாட்ஸ்பாட் என்றால் என்ன?
பொதுவாக ஒரு குறிப்பிட்ட பகுதியில் தீவிரமாக கொரோனா பரவினால் அதை ஹாட்ஸ்பாட் என்று அழைப்பார்கள். ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஒருவருக்கு கொரோனா ஏற்பட்டு, அவரின் மூலம் வேறு சிலருக்கு கொரோனா பரவி அங்கிருந்து வேகமாக வேறு சிலருக்கும் கொரோனா பரவி பலருக்கு கொரோனா ஏற்பட்டால் அதை ஹாட்ஸ்பாட்கள் என்று கூறுவார்கள். இந்த பகுதிகளில் முதல் நாள் 10 பேருக்கு கொரோனா இருந்தால் இரண்டாவது நாள் 20 பேருக்கு கொரோனா ஏற்படும்.

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை
பொதுவாக ஹாட்ஸ்பாட் பகுதிகளில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை தினமும் இரட்டிப்பாக வளரும். உதாரணமாக கேரளாவில் இருக்கும் காசர்கோடு பகுதி ஹாட்ஸ்பாட் பகுதியாகும். காசர்கோடு பகுதியில் 166 பேருக்கு கொரோனா உள்ளது. அங்கு ஒரே வாரத்தில் தினமும் 15 என்ற எண்ணிக்கையில் சராசரியாக கொரோனா ஏற்பட்டது. இதனால் காசர்கோடு ஹாட்ஸ்பாட் பகுதி என்று அழைக்கப்படுகிறது.

மொத்தம் எத்தனை மாவட்டம்
இந்தியாவில் மொத்தம் 350க்கும் அதிகமான மாவட்டங்கள் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியா முழுக்க 60க்கும் அதிகமான மாவட்டங்கள் ஹாட்ஸ்பாட் மாவட்டங்கள் என்று அழைக்கப்பட்டு இருக்கிறது. தமிழகத்தில் இதேபோல் ஹாட்ஸ்பாட் பகுதிகள் உள்ளது. தமிழகத்தில் சென்னை, திருப்பூர், ஈரோடு, கோயம்புத்தூர், திருநெல்வேலி, திண்டுக்கல், நாமக்கல் , செங்கல்பட்டு, திருச்சி, தேனி ஆகிய மாவட்டங்கள் ஹாட்ஸ்பாட் பகுதிகள் ஆகும்.

சொன்னது என்ன
பொதுவாக இந்த ஹாட்ஸ்பாட் பகுதிகளில் கொரோனாவை கட்டுப்படுத்துவது கடினம் ஆகும். மிக கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டால் மட்டுமே இங்கு கொரோனாவை கட்டுப்படுத்த முடியும். இதனால்தான் ஹாட்ஸ்பாட் பகுதிகளில் அதிக கட்டுப்பாடுகளை விதிப்போம், தீவிரமாக கண்காணிப்போம் என்று பிரதமர் மோடி தெரிவித்து இருக்கிறார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications