அடுத்தடுத்து பாதிக்கப்படும் பூக்கடைகாரர்கள்.. சென்னையை கலங்கடிக்கும் "கொரோனா கிளஸ்டர்".. அதிர்ச்சி!
சென்னையில் கொரோனா காரணமாக தொடர்ந்து பூக்கடைகாரர்கள் பலர் பாதிக்கப்படுவது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை: சென்னையில் கொரோனா காரணமாக தொடர்ந்து பூக்கடைகாரர்கள் பலர் பாதிக்கப்படுவது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பின் தீவிரம் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் மற்ற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் சென்னையில் மட்டும் பாதிப்பு அதிகரித்து வருகிறது.
சென்னையில் 176 பேருக்கு நேற்று கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு மொத்தம் 1082 பேருக்கு இதுவரை கொரோனா ஏற்பட்டுள்ளது.

பூக்கடை நபர்களை
இந்த நிலையில் சென்னையில் பழக்கடை, பூக்கடை வைத்து இருக்கும் மக்கள்தான் அதிகமாக கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளனர். சென்னையில் கோயம்பேடு மார்க்கெட்டில் மட்டும் 60 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 42 பேர் அங்கு கடை வைத்து நடத்தியவர்கள். 2 போலீசார் இதில் அடக்கம். அதேபோல் இந்த கடையில் வேலை பார்த்த நபர்களின் வீட்டில் இருக்கும் மற்ற 16 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

மளிகை கடை எப்படி
இந்த 42 பேர்களில் 24 பேர் மளிகை, காய்கறி உள்ளிட்ட கடை வைத்து நடத்திய நபர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் 4 பேர் அங்கு ஹோட்டல் வைத்து நடத்திய நபர்கள் என்று கூறப்படுகிறது. இன்னும் சிலரின் விவரங்கள் முழுமையாக கண்டுபிடிக்கப்படவில்லை. கோயம்பேட்டில் காய்கறி கடைகளுக்கு அடுத்தபடியாக பூக்கடைகளில்தான் அதிகமாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

வீடுகளுக்கு செல்கிறது
கோயம்பேட்டில் மட்டும் பூக்கடைகளில் பணியாற்றிய 9 பேருக்கு இதுவரை கொரோனா வந்துள்ளது. இந்த பூக்கடை காரர்கள் மூலம் அவர்களின் வீடுகளுக்கும் கொரோனா பரவ தொடங்கி உள்ளது. சமீபத்தில் கோயம்பேட்டில் இருக்கும் பூக்கடை ஒன்றில் 3 பேருக்கு கொரோனா ஏற்பட்டு உள்ளது. கடையின் உரிமையாளர், அவரின் மகன் மற்றும் அவரின் மனைவி மூன்று பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.

ஒரு குடும்பம்
அந்த கடையில் அருகே இருந்த இன்னொரு பூக்கடையில் 2 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இதனால் தற்போது சென்னை கோயம்பேட்டில் இயங்கி வந்த பூக்கடை, பழக்கடைகள் இன்று முதல் மாதவரம் பேருந்து நிலையத்தில் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இன்னொரு பக்கம் கோயம்பேடு பூக்கடையில் இருந்து வாங்கி வந்து வடபழனி கோயில் வாசலில் பூ விற்ற, 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வடபழனி கோவில் வாசலில் கொரோனா
இவர்கள் வடபழனி கோவில் வாசலில்தான் பூ விற்று கொண்டு இருந்துள்ளனர். இன்னும் சில பூக்கடைக்காரர்கள் வீடு வீடாக சென்று பூ விற்று இருக்கிறார்கள். சென்னைக்கு இறக்குமதி செய்யப்பட்ட பூ வீணாக கூடாது என்று குறைந்த விலையில் பூக்களை விற்று வருகிறார்கள். சென்னையில் பல பகுதிகளில் இவர்கள் வீடு வீடாக சென்று இப்படி பூக்களை விற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சந்தேகம்
சென்னையில் இப்படி வரிசையாக பூக்கடைக்கார்கள் பாதிக்கப்பட்டது நிறைய கேள்விகள் மற்றும் சந்தேங்களை எழுப்பி உள்ளது. சரியாக இவர்கள் எல்லோரும் எப்படி பாதிக்கப்பட்டார்கள் என்று கேள்வி எழுந்துள்ளது. வரிசையாக பூக்கடைக்கார்கள் எல்லோரும் பாதிக்கப்படுவதால் அவர்கள் எல்லோருக்கும் ஒரே சோர்ஸ் மூலம் கொரோனா வந்து இருக்குமோ என்று கேள்வி எழுந்துள்ளது.

மர்மம்
அதாவது கோயம்பேட்டில் ஹோல் சேல் பூ வியாபாரி என யார் மூலமாவது கொரோனா பரவி இருக்குமா, அல்லது பூ மூட்டைகள் மூலம் பரவி இருக்குமோ என்று அச்சம் எழுந்துள்ளது. ஆனால் இவர்களின் சோர்ஸை கண்டுபிடிப்பதும் அத்தனை சுலபம் இல்லை. இவர்களை உடனே தனிமைப்படுத்துவது மட்டுமே இப்போதைக்கு தீர்வாக இருக்க முடியும் என்கிறார்கள். உடனே இதனால் சென்னையை சேர்ந்த பூ கடைக்காரர்களுக்கு கொரோனா சோதனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications