சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பொருளாதார நெருக்கடி.. நீங்க எப்படி சமாளிக்கிறீங்க.. எங்களிடம் ஷேர் பண்ணுங்க

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா லாக்டவுன் தொடர்வதாலும், முழுமையான அளவில் இயல்பு நிலை திரும்பாத காரணத்தாலும் மக்களும் சரி, தொழில்நிறுவனங்களும் சரி பெரும் பாதிப்பை சந்தித்துள்ளனர். குறிப்பாக பொருளாதார ரீதியாக பெரும் சிரமங்கள் தொடர்கின்றன.

Recommended Video

    2 கோடி பேர் வேலை இழப்பு.. மோசமான நிலையில் வல்லரசு நாடு..!

    பல்வேறு புள்ளிவிவரங்களின்படி அடுத்த பல மாதங்களுக்கு பொருளாதார நெருக்கடி பெரிதாகவே இருக்கும் என்று நம்பப்படுகிறது. அம்பானி அதானி முதல் சாமானியர்கள் வரை யாருமே இதிலிருந்து தப்பவில்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பொருளாதார சரிவுகள் ஏற்பட்டுள்ளன.

    Coronavirus Impact On Economy: Tell us about your financial management

    இதில் சாமானிய மக்களின் நிலைதான் மிகக் கொடுமையானது. பெரும்பாலான நடுத்தர வர்க்கத்தினர், ஏழைகள், தினக் கூலித் தொழிலாளர்கள் என இவர்களின் சிரமங்களை அளவிடவே முடியாது.

    வாடகை கொடுக்க வேண்டும். வீட்டுச் செலவுக்கான பட்ஜெட்டில் பெரும் பாதிப்பு விழுந்துள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் வாங்க வேண்டும். பலருக்கு வேலையிழப்பு ஏற்பட்டிருக்கலாம். பலருக்கு ஊதியக் குறைப்பு நடந்திருக்கலாம். இதையெல்லாம் தாண்டி வாழ்ந்தாக வேண்டும், சமாளித்தாக வேண்டும்.

    கிட்டத்தட்ட அனைவரது வீடுகளிலும் குடும்பச் செலவுகள் கூடி விட்டன. காரணம் விலைவாசி உயர்ந்துள்ளது. காய்கறி விலை அதிகரித்துள்ளது. ஆட்டுக்கறி விலை ஆயிரத்தைத் தாண்டி விட்டது.. நிம்மதியாக வாங்கிச் சாப்பிட முடியாத நிலை. இதனால் குடும்பத்திற்கான மாதாந்திர பட்ஜெட்டும் தானாகவே அதிகரித்துள்ளது. இதை சமாளிக்க வேண்டிய நிர்ப்பந்தம் அனைவருக்குமே ஏற்பட்டுள்ளது.

    உங்களது பொருளாதார தடுமாற்றத்தை நீங்கள் எப்படி சமாளிக்கிறீர்கள்.. உங்களது குடும்பச் செலவுகளை குறைத்துள்ளீர்களா அல்லது மாற்றியமைத்துள்ளீர்களா.. சிக்கனத்தை எப்படி அமல்படுத்தியுள்ளீர்கள்.. மற்றவர்களுக்கும் உதவட்டும் உங்களது நடவடிக்கைகள். உங்களது சமாளிப்பு நடவடிக்கைகளை எங்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

    சிலர் பல தியாகங்களை செய்ய ஆரம்பித்துள்ளனர். சீரியல் ஸ்மோக்கர்கள் சிலர் அந்தப் பழக்கத்தை விட்டு விட்டதாக கூறுகிறார்கள். இதனால் பெருமளவில் காசு கரியாவதைக் குறைக்க முடியும் என்பது அவர்களது கருத்து. இதுபோல சின்னச் சின்னதாக ஒவ்வொரு வீடுகளிலும் மாற்றங்கள் ஏற்பட ஆரம்பித்துள்ளது.

    நீங்கள் எப்படிப்பட்ட மாற்றத்தை உங்களது வீட்டில், தொழில்நிறுவனத்தில் அமல்படுத்தியுள்ளீர்கள். அதை எங்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். அது நாலு பேருக்கு உதவும்போது அவர்களும் தங்களது பொருளாதார தடுமாற்றத்திலிருந்து மீண்டு வர நிச்சயம் உதவும்.

    உங்களது மெயில்களை அனுப்ப வேண்டிய முகவரி: [email protected]

    English summary
    Coronavirus Impact On Economy: Every family is undergoing tremendous financial stres due to the Coronavirus pandemic. Pl tell US how you manage this?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X