சென்னையில் இன்று ஒரேநாளில் 7 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று... பெற்றோர்கள் கலக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் இன்று ஒரே நாளில் 7 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் குழந்தைகளை வைத்துள்ள பெற்றோர் கலக்கம் அடைந்துள்ளனர்.

கொரோனா வைரஸின் தாக்கம் சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. காற்றை விட வேகமாக சென்னையில் கொரோனா பரவிவருவதால் அதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இருப்பினும் கொரோனா தொற்றை முழுமையாக தடுக்க முடியாமல் அதிகாரிகளும், மருத்துவ நிபுணர்களும் தடுமாறுகின்றனர்.

Coronavirus infects 7 children in Chennai today

இந்த சூழலில் சென்னையில் இன்று ஒரே நாளில் 7 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் பிறந்து ஒரே நாள் ஆன குழந்தைக்கு கொரோனா இருப்பது மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. பிறந்த குழந்தைக்கு கொரோனா எவ்வாறு பரவியது என கண்டறியப்பட்டு வருகிறது.

இதேபோல் சென்னை சூளைமேட்டில் பிறந்து 2 மாதமே ஆன குழந்தைக்கு கொரோனா பாசிட்டிவ் என முடிவு வெளியாகியுள்ளது. வண்ணாரப்பேட்டை, நெற்குன்றம் ஆகிய பகுதிகளிலும் 3 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. இதுவரை பெரியவர்களை மட்டுமே தாக்கி வந்த கொரோனா அண்மைக்காலமாக 10 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளை அதிகளவு பாதித்துவருகிறது.

கொரோனா பாதித்த குழந்தைகளுக்கு அரசு மருத்துவமனைகளில் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விரைவில் குழந்தைகள் கொரோனா தொற்றில் இருந்து நலம்பெறுவார்கள் என மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+