உங்க அம்மா பெட்ரூமுக்கு லாக் போட்டிருந்தா.. நக்கலடித்த டிவிட்டர் நபரை.. வச்சு செஞ்ச கஸ்தூரி!

ட்விட்டர்வாசியை வெளுத்தெடுத்து பதிவு போட்டுள்ளார் நடிகை கஸ்தூரி

Subscribe to Oneindia Tamil

சென்னை: "நீ கண்ட்ரோல் இல்லாம பேசிட்டு இருக்கே.. கொஞ்சம் உன் வாயை லாக் பண்ணி வை" என்று கஸ்தூரியை பார்த்து ஒருவர் கேள்வி கேட்க.. "உங்க அம்மா பெட்ரூமுக்கு லாக் போட்டிருந்தா, உன் இம்சை இருந்திருக்காது" என்று அந்த ட்விட்டர்வாசிக்கு கஸ்தூரி செம பதில் ஒன்றை அளித்துள்ளார்.

Recommended Video

    நக்கலடித்த டிவிட்டர் நபரை.. வச்சு செஞ்ச கஸ்தூரி!

    கொஞ்சம்கூட எதிர்பார்க்காத அளவுக்கு தமிழகத்தில் தொற்று எண்ணிக்கை பரவுகிறது.. அதைவிட ஆச்சரியமாக தொற்றால் பாதிக்கப்பட்டவர்களும் நலமடைந்து வீடு திரும்பி கொண்டிருக்கின்றனர். 4 மாவட்டங்கள் பச்சை கலருக்கு வந்துவிட்டது.

    12 மாவட்டங்கள் மட்டுமே ரெட் கலர் என் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால் ஊரடங்கை நீட்டிப்பதா வேண்டாமா, அல்லது தளர்த்துவதா என்ற பல்வேறு யோசனைகளில் அரசு ஈடுபட்டு வருகிறது. பல்வேறு தரப்பினரும் ஊரடங்கு தேவை என்பதையே வலியுறுத்தி வருகின்றனர்.

    கஸ்தூரி

    கஸ்தூரி

    அந்த வகையில் நடிகை கஸ்தூரியும் தனது கருத்தை தெரிவித்துள்ளார். "பஞ்சாப்பில் ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதை போல, தமிழ்நாடும் ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பு செய்ய நிறைய வாய்ப்பு இருக்கிறது.. சென்னை கன்ட்ரோல் மீறி போய்விட்டது" என்று தெரிவித்திருந்தார். இதற்கு ஒருவர், "நீ கூட தான் கண்ட்ரோல் இல்லாம பேசிட்டு இருக்கே.. கொஞ்சம் உன் வாயை லாக் பண்ணி வை" என்று கமெண்ட் செய்தார்.

    பெட்ரூம்

    பெட்ரூம்

    வழக்கமாக யார் எந்த விமர்சனம் முன் வைத்தாலும், அதை அதே விமர்சனங்களால் எதிர்கொள்வார் கஸ்தூரி.. திருப்பி போட்டு வாங்கி அவர்களை ஆஃப் செய்து ட்வீட் போடுவதுதான் இவரது ஸ்பெஷல்.. அந்த வகையில் இந்த நபருக்கும் ஒரு பதிலடி தந்துள்ளார். அதில், "உன் அம்மா பெட்ரூமுக்கு லாக் போட்டிருந்தா இன்னிக்கு உன்னோட இம்சை உலகத்துக்கு இருந்திருக்காது" என ட்வீட் செய்துள்ளார். இதற்கு அந்த நபர் டென்ஷன் ஆகி விடாமல் கஸ்தூரியை திட்டி கொண்டிருக்கிறார்.

    சிறுமி ஷிவானி

    சிறுமி ஷிவானி

    இதனிடையே கஸ்தூரி ஒரு பதிவை ட்வீட்டிலும், பேஸ்புக்கிலும் போட்டுள்ளார். துபாயில் வசிக்கும் இந்தியாவை சேர்ந்த 4 வயது சிறுமி ஷிவானிக்கு கடந்த 1-ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது... அந்த சிறுமி, சென்ற ஆண்டு சிறுநீரக புற்றுநோயையும் எதிர்த்து போராடியுள்ளார். அதனால் அவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் தொற்ற உறுதியாகி, சிகிச்சையும் தரப்பட்டது.. டாக்டர்களுக்கே சவாலாக இருந்தது இந்த சிகிச்சை.. இப்போது ஷிவானி குணமாகி டிஸ்சார்ஜ் ஆகிவிட்டது பலருக்கும் ஆச்சரியத்தை தந்தது.

    தற்கொலை

    தற்கொலை

    அதேபோல, கேரளாவில் சொந்த ஊரான மானந்தவாடியில் 45,000 சதுர அடியில் கட்டிய வீட்டில் ஒரு மாத காலம் மட்டுமே வாழ்ந்த, ஜாய் அரக்கல் என்ற தொழிலதிபர் துபாயில் தற்கொலை கொண்டார். இந்த இரு சம்பவமும் துபாயில் அடுத்தடுத்து நிகழ்ந்துள்ளது. இதை குறிப்பிட்டுதான் கஸ்தூரி தன்னுடைய கருத்தை சொல்லி உள்ளார்.

    கிரகங்கள்

    கிரகங்கள்

    அதில், "எனக்கு ஜோசியம் வாஸ்து போன்றவற்றில் பெரிய நம்பிக்கை இல்லை. நம் தலைவிதி நம் கையில் என்ற தன்னம்பிக்கை இருக்கும் பொழுது மற்ற நம்பிக்கைகள் எதற்கு என்று நினைப்பவள் நான். ஆனால் இப்பொழுது நடக்கும் அதிர்ச்சி நிகழ்வுகளை பார்க்கும் பொழுது , ஒரு வேலை இந்த கிரகங்கள், ராசி இதெல்லாம் இருக்குமோ என்று தோன்றுகிறது. How else can you explain the totally unexpected ?

    துர்மரணம்

    துர்மரணம்

    துபாயிலிருந்து இரண்டு செய்திகள்- கேன்சரை வென்ற ஒரு இந்திய சிறுமி, இப்பொழுது கொரோனாவிலுருந்து மீண்டுள்ளார். அந்த பெண்ணின் தலையெழுத்து எவ்வளவு கெட்டி பாருங்கள். அதே துபாயில் புகழ் பெற்ற தொழிலதிபர் ஜாய் அரக்கலின் தற்கொலை கேரளாவையே உலுக்கியுள்ளது. கேரளாவிலேயே ஆக பெரிய வீட்டை கட்டி, அதில் வாழ தொடங்கிய ஒரே மாதத்தில் துர்மரணத்தை தழுவியுள்ளார்.

    என்ன நினைக்கிறீங்க?

    என்ன நினைக்கிறீங்க?

    இந்த செய்தியை கேள்விப்பட்ட மறுக்கணம் எனக்கு தோன்றியது "என்னடா அந்த வீட்டு ராசி ! " ச்சை, என்ன இப்பிடி பகுத்தறிவுக்கு புறம்பாக யோசனை என்று நானே என்னை கடிந்து கொண்டாலும்.... அந்த நினைப்பு விட மாட்டேன் என்கிறது. நீங்க என்ன நினைக்கிறீங்க?" என்று பதிவிட்டிருக்கிறார். இந்த முரண்பட்ட சம்பவங்களை முன்வைத்து கஸ்தூரி போட்ட பதிவு பலரையும் ஈர்த்து வருகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+