புதிய கிளஸ்டரா? தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா.. கோயம்பேடு மட்டும் காரணமல்ல.. தொடரும் மர்மம்!
தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா கேஸ்கள் அதிகரித்து வர கோயம்பேடு மார்க்கெட் மட்டும்தான் காரணமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா கேஸ்கள் அதிகரித்து வர கோயம்பேடு மார்க்கெட் மட்டும்தான் காரணமாக என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 776 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 13,967 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்து உள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 94 ஆக உயிரிழந்து உள்ளனர்.

கோயம்பேடு எப்படி
இந்த நிலையில் தமிழகத்தில் தொடக்கத்தில் கேஸ்கள் அதிகரிக்க கோயம்பேடு மார்க்கெட் முக்கிய காரணமாக இருந்தது. ஏனென்றால் கடந்த மாதம் 27ம் தேதி கோயம்பேட்டில் முதல் கேஸ் வந்தது. அதன்பின் தமிழகத்தில் வரிசையாக கொரோனா கேஸ்கள் வர தொடங்கியது. தமிழகம் முழுக்க கோயம்பேடு காரணமாக கொரோனா கேஸ்கள் பரவியது. சென்னையில் மட்டும் இதனால் 2 ஆயிரம் பேருக்கு கொரோனா கேஸ்கள் வந்தது.

கொரோனா கிளஸ்டர் அதிகம்
ஆனால் தமிழகத்தில் இந்த கோயம்பேடு கொரோனா கிளஸ்டர் கடந்த வாரம் இறுதியிலேயே முடிந்துவிட்டது. கடந்த வாரம் இறுதியில் தமிழகத்தில் கிட்டத்தட்ட கோயம்பேடு சென்று வந்த லாரி டிரைவர்கள், வியாபாரிகள் எல்லோரும் தனிமைப்படுத்தப்பட்டனர். பல ஆயிரம் பேர் சோதனை செய்யப்பட்டனர். இதனால் கோயம்பேடு மார்க்கெட் மூலம் புதிதாக கொரோனா கேஸ்கள் உருவாவது மொத்தமாக குறைந்தது.

கோயம்பேடு மார்க்கெட் திறக்கும் பணிகள்
இதையடுத்து தற்போது மீண்டும் தமிழகத்தில் கோயம்பேடு மார்க்கெட்டை திறக்கும் பணிகள் நடந்து வருகிறது. அங்கு மொத்தமாக சுத்தப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. மார்க்கெட் முழுக்க கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டு வருகிறது. இன்னும் 2 வாரங்களில் அங்கு சுத்தப்படுத்தும் பணிகள் முடிந்து மார்க்கெட் திறக்கும் என்கிறார்கள். இதனால் கோயம்பேடு கிளஸ்டர் முடிந்துவிட்டது என்று கூறுகிறார்கள்.

வேறு என்ன காரணம்
ஆனால் கோயம்பேடு கிளஸ்டர் இப்படி முடிந்த பின்பும் கூட தமிழகத்தில் கொரோனா கேஸ்கள் அதிகமாக வர தொடங்கி உள்ளது. தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா கேஸ்கள் அதிகரித்து வர கோயம்பேடு மார்க்கெட் மட்டும்தான் காரணமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழகத்திற்கு கடந்த சில நாட்களாக வெளி மாநிலத்தில் இருக்கும் மக்கள் வருகிறார்கள். சிறப்பு ரயில்கள் மூலம் மக்கள் தமிழகம் நோக்கி வருகிறார்கள்.

மீண்டும் கேஸ்கள் அதிகரிக்கிறது
இதனால் தமிழகத்தில் மீண்டும் கேஸ்கள் அதிகரிக்க தொடங்கி உள்ளது.முக்கியமாக மகாராஷ்டிரா, டெல்லி, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் இருந்து தமிழகம் வரும் மக்கள் மூலம் கொரோனா கேஸ்கள் அதிகரிக்க தொடங்கி உள்ளது. அதேபோல் சிறப்பு விமானம் மூலம் தமிழகம் வரும் பயணிகள் மூலம் கொரோனா கேஸ்கள் அதிகரிக்க தொடங்கி உள்ளது. ஆனால் தமிழகத்தில் கொரோனா அதிகரிக்க இது மட்டும் காரணம் இல்லை.

அதிகரிக்கும் குழப்பம்
ஆனால் தமிழகத்திற்கு இப்படி வரும் பயணிகளின் மூலம் புதிய கொரோனா கேஸ்கள் வந்தாலும், அது மட்டுமே தமிழகத்தில் கொரோனா அதிகரிக்க காரணம் கிடையாது. தமிழகத்தில் சென்னையில் தொடர்ந்து 500+ கொரோனா கேஸ்கள் வருகிறது. இதில் பலருக்கு எப்படி கொரோனா ஏற்படுகிறது என்றே தெரியவில்லை. இதனால் பெரிய அளவில் குழப்பம் ஏற்பட தொடங்கி உள்ளது. புதிய கேஸ்களுக்கு காரணம் என்ன என்று குழப்பம் ஏற்பட தொடங்கி உள்ளது.

காண்டாக்ட் டிரேசிங்
தமிழ்கத்தில் பலருக்கு காண்டாக்ட் டிரேசிங் செய்தும் கொரோனா கேஸ்கள் எப்படி வந்தது என்று தெரியவில்லை. காரணமே இல்லாமல் தமிழகத்தில் கேஸ்கள் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதனால் தமிழகத்தில் ஸ்டேஜ் 3 பெரிய அளவில் பரவி விட்டதா என்று கேள்வி எழுந்துள்ளது. ஸ்டேஜ் 3 ஏற்கனவே வந்துவிட்டதாக மருத்துவர்கள் சிலர் முன்பே குறிப்பிட்டு இருந்தனர். ஸ்டேஜ் 3 காரணமாக மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications