மீண்டும் திறக்கப்படுகிறது கோயம்பேடு மார்க்கெட்.. செப். 28ம் தேதி முதல் செயல்படும்.. அதிரடி முடிவு!
சென்னை: சென்னை கோயம்பேடு காய்கறி சந்தை வரும் செப்டம்பர் 28-ந் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக குறைந்து வந்த கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. சென்னையிலும் மீண்டும் கேஸ்கள் அதிகரிக்க தொடங்கி உள்ளது.
சென்னையில் தொடக்க காலத்தில் கொரோனா கேஸ்கள் அதிகரிக்க கோயம்பேடு முக்கிய காரணமாக இருந்தது. கோயம்பேடு கிளஸ்டர் காரணமாக தமிழகம் முழுக்க பலருக்கு கொரோனா பரவியது .

சென்னை எப்படி
கடந்த ஏப்ரல் 27ம் தேதிதான் கோயம்பேட்டில் தமிழகத்தில் முதல் நபருக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டது. அங்கிருக்கும் பழக்கடை வியாபாரி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டது. அவர் மூலமும், இன்னும் பலர் மூலமும் மார்க்கெட்டில் பலருக்கு பரவியது. அங்கு தொடர்ந்து கொரோனா பரவியதால் மே 5-ம் தேதி சென்னை கோயம்பேடு காய்கறி சந்தை மூடப்பட்டது.

மாற்றம் செய்யப்பட்டது
அங்கு இருந்து மார்கெட் அப்படியே திருமழிசைக்கு மாற்றப்பட்டது. மலர் மற்றும் பழக்கடை மாதவரத்திற்கு மாற்றப்பட்டது. அங்குதான் தற்போது மார்க்கெட் வியாபாரம் நடந்து வருகிறது. கொரோனா பரவலை தடுக்கும் வகையில் முற்றிலுமாக மார்க்கெட் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தை வரும் செப்டம்பர் 28-ந் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும்ம் திறப்பு
அதற்கு முன்பாக கோயம்பேடு சந்தையில் உள்ள உணவு தானிய மொத்த விற்பனை அங்காடி, செப்டம்பர் 18-ம் தேதிமுதல் செயல்படும்.கோயம்பேடு வணிக வளாகத்தில் இதற்காக சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இன்னும் ஒரு வாரத்தில் இந்த பணிகள் முடியும் என்று கூறப்படுகிறது.வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்ரமராஜா மற்றும் சங்க உறுப்பினர்கள் இன்று துணை முதல்வர் ஓ . பன்னீர்செல்வத்தை சந்தித்தனர்.

எப்படி உள்ளது
இந்த சந்திப்பை தொடர்ந்து கோயம்பேடு மார்க்கெட் திறப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.மிகுந்த கட்டுப்பாட்டுடன் இந்த மார்க்கெட் மீண்டும் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தற்போது ஒவ்வொரு கடையிலும் மூன்று அடக்கு கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. மிகவும் சக்தி வாய்ந்த கிருமிநாசினிகள் இதற்காக பயன்படுத்தப்படுகிறது.
-
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
சென்னையை மீண்டும் அலறவிடும் கொரோனா! மருத்துவர் பகிர்ந்த திடுக் தகவல்.. யாருக்கெல்லாம் ஆபத்து? -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications