விழுப்புரத்திலிருந்து வந்தார்.. மறுநாளே கொரோனா.. மருத்துவரால் கிருஷ்ணகிரியில் பீதி.. என்ன நடந்தது?
கொரோனா பாதித்த மருத்துவர் ஒருவர் கிருஷ்ணகிரியில் தங்கிவிட்டு சென்ற காரணத்தால் கிருஷ்ணகிரியில் கொரோனா பரவி இருக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.
சென்னை: கொரோனா பாதித்த மருத்துவர் ஒருவர் கிருஷ்ணகிரியில் தங்கிவிட்டு சென்ற காரணத்தால் கிருஷ்ணகிரியில் கொரோனா பரவி இருக்க வாய்ப்புள்ளது என்று அஞ்சப்படுகிறது.
தமிழகத்தில் நேற்று மட்டும் 121 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 2058 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆக்ட்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை 902 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் தற்போது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை. கடுமையாக தடுப்பு நடடிக்கைகள் மற்றும் ஊரடங்கு காரணமாக அங்கு யாருக்கும் கொரோனா பரவவில்லை.

திருச்சி நிலை
கிருஷ்ணகிரியை தொடர்ந்து நேற்று ஈரோட்டில் எல்லா கொரோனா நோயாளிகளும் குணமடைந்தனர். இதனால் ஈரோட்டில் இருந்து கொரோனா விரட்டப்பட்டது. அதேபோல் கொரோனா நோயாளிகள் எல்லோரும் குணப்படுத்தப்பட்ட காரணத்தால் திருச்சியிலும் மொத்தமாக கொரோனா விரட்டப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரியில் இரண்டு நாட்களுக்கு முன் ஒருவருக்கு கொரோனா வந்துவிட்டு, அவருக்கு பின் கொரோனா இல்லை என்று உறுதி செய்யப்பட்டது.

என்ன நம்பிக்கை
கிருஷ்ணகிரியில் கொரோனா பரவாமல் இருப்பது தமிழகம் முழுமைக்கும் முக்கிய நல்ல செய்தியாக, நம்பிக்கையாக மாறியுள்ளது. கிருஷ்ணகிரியை பின்பற்றி தமிழகம் முழுக்க கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது. கிருஷ்ணகிரி எப்படி கண்டெயின்மெண்ட் திட்டத்தை செயல்படுத்தியது, அங்கு எல்லைகள் எப்படி காக்கக்கப்பட்டது என்பது தமிழகம் முழுமைக்கும் மிக முக்கியமான பாடமாக மாறியுள்ளது.

அச்சம் எழுந்துள்ளது
ஆனால் தற்போது கிருஷ்ணகிரியில் கொரோனா பரவும் அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனா அச்சத்தால் கிருஷ்ணகிரி மொத்தமாக தனிமைப்படுத்தப்படுகிறது. கொரோனா பாதித்த விழுப்புரம் மருத்துவர் கிருஷ்ணகிரிக்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன் வந்துள்ளார். இவர் கிருஷ்ணகிரி வந்துவிட்டு சென்ற பின்தான் அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரியில் உறவினர் வீடு ஒன்றில் இவர் தங்கி உள்ளார்.

அதிர்ச்சி அளிக்கிறது
கிருஷ்ணகிரியில் இவர் மொத்தம் 11 பேரை சந்தித்துவிட்டு சென்றுள்ளார். இவர்கள் எல்லோரும் இவரின் உறவினர்கள் என்று கூறப்படுகிறது. இவர்கள் எல்லோரும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நேற்று வரை தொற்றில்லா பச்சை பகுதியாக இருந்த கிருஷ்ணகிரியில் 11 பேருக்கு இன்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் கிருஷ்ணகிரி மக்கள் அச்சத்திற்கு உள்ளாக்கி உள்ளனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications