சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நீலகிரி, கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி, குற்றாலம் செல்ல மாவட்ட ஆட்சியர்களிடம் இ பாஸ் பெற வேண்டும்

Google Oneindia Tamil News

சென்னை: நீலகிரி, கொடைக்கானல், ஏற்பாடு, ஏலகிரி மற்றும் குற்றாலம் ஆகிய சுற்றுலாதலங்களுக்கு அவசர காரணங்களுக்காக செல்ல மாவட்ட ஆட்சியர்களிடம் இ பாஸ் பெற வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்டுள்ள லாக்டவுன் புதிய தளர்வுகளுடன் ஜூன் 28 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிப்பின் அடிப்படையில் 38 மாவட்டங்களும் 3 வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

Coronavirus Lockdown: Collectors E-Pass for TN Hill stations

கொரோனா தொற்று பாதிப்பு அதிகம் உள்ள 11 மாவட்டங்களில் ஏற்கனவே தளர்வுகள் எதுவும் இல்லை. அதே நிலையே ஜூன் 28 வரை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதர 27 மாவட்டங்களில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு மட்டும் பேருந்து போக்குவரத்து உள்ளிட்ட கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒரு யானையை காப்பதற்காக.. போன் போட்ட சிஎம் ஆபிஸ்.. மொத்தமாக இறங்கிய அரசு இயந்திரம்.. நெகிழும் நீலகிரி ஒரு யானையை காப்பதற்காக.. போன் போட்ட சிஎம் ஆபிஸ்.. மொத்தமாக இறங்கிய அரசு இயந்திரம்.. நெகிழும் நீலகிரி

அதேபோல் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்கள் தவிர்த்த இதர 23 மாவட்டங்களிலும் சில கூடுதல் தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே சுற்றுலா தலங்களுக்கு அவசிய பயணத்துக்கு மட்டும் இ பாஸ் பெற்று செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தது.

தற்போதைய புதிய தளர்வு அறிவிப்பில், நீலகிரி மாவட்டம், கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி, குற்றாலம் ஆகிய இடங்களுக்கு அவசர காரணங்களுக்காக செல்ல தொடர்புடைய மாவட்ட ஆட்சியர்களிடம் இ பாஸ் பெற்று பயணிக்க அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Tamilnadu Govt has announced that the Collector's E-Pass must for the Hill stations travel.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X