ரேசன் கார்டு இல்லாதவர்களுக்கும் ரூ500க்கு மளிகை பொருட்கள்: சென்னை ஹைகோர்ட்டில் தமிழக அரசு
சென்னை: ரேசன் கார்டு இல்லையென்றாலும் 500 ரூபாய் மதிப்பிலான மளிகைப்பொருட்கள் அனைத்துதரப்பினருக்கும் வழங்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில் அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்த்தி விற்கப்படுகிறது.இதையடுத்து பொதுமக்களுக்கு வசதியாக 500 ரூபாய் விலையில் 19 வகையான வீட்டுக்குத் தேவையான மளிகைப் பொருட்கள் ரேஷன் கடைகள் மூலம் விற்பனை செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்தது. ரேசன் கார்டு இல்லாதவர்களுக்கும் இந்த மளிகைப்பொருட்களை வழங்கவேண்டும் என்று வழக்கறிஞர் சூரியபிரகாசம் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

மேலும் ரேசன் கடைகளின் மூலம் வினியோகம் செய்யப்பட்டால் மக்கள் கூட்டம் அதிகமாகும், சமூக இடைவெளி பின்பற்றமுடியாது என தெரிவித்திருந்தார். மளிகைப்பொருட்களை வீடுகளுக்கு சென்றே வழங்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சத்யநாரயணன்,நிர்மல்குமார் பெஞ்ச் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் நடைபெற்ற விசாரணையின்போது, அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில் அனைத்துதரப்பினருமே ரேசன் கடைகளுக்கு சென்று 500 ரூபாய் மதிப்பிலான மளிகைப்பொருட்களை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரேசன் கார்டோ, மற்ற எந்த ஒரு அடையாள விவரங்களோ கேட்கப்படமாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்












Click it and Unblock the Notifications