விஜயபாஸ்கர் எங்கே.. சுகாதார துறை அமைச்சர் ஆரோக்கியத்துடன் உள்ளாரா.. காங். எம்பி சரமாரி கேள்வி
காங்கிரஸ் எம்பி விஷ்ணுபிரசாத் விஜயபாஸ்கர் குறித்து கேள்வி எழுப்பி உள்ளார்
சென்னை: யார் விட்டாலும் தமிழக காங்கிரஸ் விடுவதாக இல்லை.. அமைச்சர் விஜயபாஸ்கர் எங்கே, நல்லா இருக்காரா? அவரது உடல், மனநிலை பற்றி தெரிந்து கொள்ள மக்கள் ஆர்வமாக உள்ளனர்.. சுகாதார துறை அமைச்சர் ஆரோக்கியத்துடன்தான் உள்ளாரா என்று எம்பி விஷ்ணு பிரசாத் கேள்வி எழுப்பி உள்ளார்!
Recommended Video
அமைச்சர் விஜயபாஸ்கர் புதுக்கோட்டையில் உள்ளார்.. இங்குதான் இவரது வீடு உள்ளது.. தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் என்றதுமே ஒவ்வொரு மருத்துவமனைக்கும் சென்றும் ஆய்வுகளை நடத்தினார்.

இரவு பகல் பார்க்காமல் பம்பரம் போல சுற்றி சுற்றி வந்து ஆய்வு நடத்தினார்.. செய்தியாளர்களை சந்தித்தார்.. இப்படி தமிழக மக்களுடன் எந்நேரமும் தொடர்பில் இருந்தவர் திடீரென அனைத்தையும் குறைத்து கொண்டார். எனினும் அரசின் முக்கிய நிகழ்வுகள், கூட்டங்களில் பங்கேற்று வருகிறார். நேற்றுகூட விஜயபாஸ்கர் அப்போலோ ஆஸ்பத்திரிக்கு சென்றிருக்கிறார்.. வழக்கம்போல ஆய்வினை மேற்கொண்டதும் அதனை தன்னுடைய ட்வீட்டிலும் பதிவு செய்துள்ளார்.
ஒரு செய்தியாளர் சந்திப்பில்கூட அமைச்சர் ஜெயக்குமாரிடம் விஜயபாஸ்கர் எங்கே, அவரை முன்புபோல இப்போதெல்லாம் பார்க்க முடிவதில்லையே என்று வெளிப்படையாக கேள்வி எழுப்பப்பட்டது.. அதற்கு தேவையில்லாத யூகங்கள் வேண்டாம், அமைச்சர் அவரது பணியை சிறப்பாகவும், வழக்கம்போலவும் செய்து வருகிறார் என்று விளக்கம் தந்தார் ஜெயக்குமார்.
இது தனிப்பட்ட அதிமுகவின் உள்விவகாரம் என்றாலும் காங்கிரஸ் இதனை விடுவதாக இல்லை.. சில தினங்களுக்கு முன்பு கேஎஸ் அழகிரி ட்வீட் போட்டு கேள்வி கேட்டிருந்தார்.. "தலைநகர் சென்னையில் இருந்து கொரோனா எதிர்ப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் முடுக்கிவிடவேண்டிய சுகாதார அமைச்சர் சமீபகாலமாக பார்வையில் தென்படாமல் இருக்கிறார். இச்சூழலில் நேற்று மாலை புதுக்கோட்டையில், தமது வீட்டில் அகல் விளக்கை ஏற்றியிருக்கிறார்.

சமீபகாலமாக பத்திரிகையாளர்களை சந்தித்துக்கொண்டிருந்த அமைச்சருக்கு பதிலாக சுகாதாரத்துறை செயலாளர் சந்தித்து வருகிறார். இத்தகைய திடீர் மாற்றத்திற்கு என்ன காரணம் என்பதை அறிய மக்கள் விரும்புகிறார்கள்" என்றார்.

இதேபோல காங்கிரஸ் எம்பி விஷ்ணு பிரசாத்தும் கேள்வி எழுப்பி உள்ளார்.. தன்னுடைய ட்விட்டர் பதிவில் "தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளாரா? அவரின் உடல் மற்றும் மன நிலை பற்றி தெரிந்து கொள்ள மக்கள் ஆர்வமாக உள்ளனர்" என்று கூறியுள்ளார்.
-
விஜயபாஸ்கரின் முயற்சிக்கு முட்டுக்கட்டை.. தவெகவில் கிளம்பிய புகைச்சல்.. ஆட்டத்தை மாற்றிய டெல்லி -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications