ஆன்லைனில் அனைத்து பொருட்களையும் ஆர்டர் செய்யலாம்.. பச்சை, ஆரஞ்ச் மண்டலங்களில் தளர்வு!
இந்தியாவில் பச்சை மற்றும் ஆரஞ்ச் மண்டலங்களில் ஆன்லைன் மூலம் அனைத்து பொருட்களையும் விற்பனை செய்யலாம் என்று அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை: இந்தியாவில் பச்சை மற்றும் ஆரஞ்ச் மண்டலங்களில் ஆன்லைன் மூலம் அனைத்து பொருட்களையும் விற்பனை செய்யலாம் என்று மத்திய அரசு சார்பாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
நாடு முழுவதும் ஊரடங்கு மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் இந்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மே 17ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில்தான் இந்தியாவில் பச்சை மற்றும் ஆரஞ்ச் மண்டலங்களில் ஆன்லைன் மூலம் அனைத்து பொருட்களையும் விற்பனை செய்யலாம் என்று மத்திய அரசு சார்பாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அமேசான், பிளிப்கார்ட் ஆகிய நிறுவனங்கள் ஆன்லைன் மூலம் அனைத்து பொருட்களையும் விற்பனை செய்யலாம்.
இதனால் பச்சை மற்றும் ஆரஞ்ச் மண்டலங்களில் அத்தியாவசிய பொருட்கள் அல்லாத மற்ற பொருட்களையும் ஆர்டர் செய்ய முடியும். அதாவது புத்தகங்கள், உடைகள், போன்கள் போன்ற பொருட்களையும் ஆர்டர் செய்ய முடியும். ஆனால் சிவப்பு மண்டலங்களில் அத்தியாவசிய பொருட்களை மட்டுமே ஆர்டர் செய்ய முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக நாடு முழுக்க ஆன்லைன் வர்த்தகம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் ஆன்லைன் வர்த்தகத்தை மீட்டு எடுக்கும் வகையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்தியாவில் முதல் முறையாக கடந்த ஏப்ரல் மாதம் முழுக்க ஆன்லைன் மூலம் ஒரு போன் கூட விற்பனை செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications