மோசமாகும் நிலை.. சென்னையில் ஒரே நாளில் 176 பேருக்கு கொரோனா.. 88 பேருக்கு காண்டாக்ட் இல்லை.. சிக்கல்!
சென்னை: சென்னையில் 176 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.சென்னையில் மொத்தம் 1082 பேருக்கு இதுவரை கொரோனா ஏற்பட்டுள்ளது.
சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருக்கிறது. சென்னையில் கடந்த 4 நாட்களாக கொரோனா மிக மோசமாக அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் ஒரே நாளில் 203 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,526 ஆக உயர்ந்துள்ளது.தமிழகத்தில் இதனால் ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை 1183 ஆக உயர்ந்துள்ளது.

சென்னை நிலை
இன்று கொரோனா காரணமாக ஒருவர் பலியாகி உள்ளார். தமிழகத்தில் பலி எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் 176 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.சென்னையில் மொத்தம் 1082 பேருக்கு இதுவரை கொரோனா ஏற்பட்டுள்ளது. சென்னையில் இன்றுதான் அதிகமாக 3600 பேருக்கு கொரோனா சோதனைகள் செய்யப்பட்டுள்ளது .

சென்னையில் அதிகரிக்கும் சோதனை
சென்னையில் மொத்தமாக 33000 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னையில்தான் அதிகமான நபர்களுக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கடந்த நான்கு நாட்களாக வரிசையாக கேஸ்கள் அதிகரிக்க தொடங்கி உள்ளது. சென்னையில் இரண்டு நாள் முன் 103 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. நேற்று முதல் நாள் 94 பேருக்கு கொரோனா ஏற்பட்டது.

இன்று வந்த கேஸ்கள்
இந்த நிலையில் நேற்று மிக அதிகமாக 138 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. சென்னையில் 176 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா கிராப் மீண்டும் உயர தொடங்கி உள்ளது. சென்னையில் இன்று வந்த யாருக்கும் கொரோனா அறிகுறி ஏற்படவில்லை. ஆம் இன்று கொரோனா ஏற்பட்ட எல்லோரும் அறிகுறி இல்லாமல் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கேஸ் எப்படி வந்தது
சென்னையில் இன்று கொரோனா வந்தவர்களின் 88 பேருக்கு எப்படி கொரோனா வந்தது என்றே தெரியவில்லை. அந்த அளவிற்கு சென்னையில் நிலைமை மோசமாகி வருகிறது. சென்னையில் சமீப நாட்களாக இப்படி அதிகமாக பலருக்கு எப்படி கொரோனா வந்தது என்றே தெரியாத நிலை உள்ளது. இதனால் சென்னையில் ஸ்டேஜ் 3 பரவி இருக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications