சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஒரே நாளில் 359 பேர் டிஸ்சார்ஜ்.. தமிழகத்தில் வேகமாக குணமடையும் கொரோனா நோயாளிகள்.. எப்படி சாத்தியம்?

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 359 பேர் குணப்படுத்தப்பட்டுள்ளனர். இது மிக முக்கியமான சாதனையாக பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் ஒரு பக்கம் கொரோனா கேஸ்கள் அதிகரித்து வருகிறது. இன்னொரு பக்கம் கொரோனா காரணமாக டிஸ்சார்ஜ் செய்யப்படும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 434 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

சென்னையில் 309 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் மொத்த கொரோனா கேஸ்களின் எண்ணிக்கை 10108 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் 2599 பேர் இதுவரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

காலையிலேயே 50 கொரோனா கேஸ்கள்.. திருநெல்வேலியில் நடந்த ஷாக் திருப்பம்.. காரணம் கோயம்பேடு கிடையாது!காலையிலேயே 50 கொரோனா கேஸ்கள்.. திருநெல்வேலியில் நடந்த ஷாக் திருப்பம்.. காரணம் கோயம்பேடு கிடையாது!

எப்படி நடந்தது

எப்படி நடந்தது

இந்த நிலையில் ஒரே நாளில் இத்தனை பேர் குணப்படுத்தப்பட்டது எப்படி என்று கேள்வி எழுந்துள்ளது. இவர்கள் எல்லோரும் ஒரே நாளில் குணப்படுத்தப்பட்ட நபர்கள் இல்லை. இவர்களுக்கு சில நாட்களுக்கு முன்பாகவே கொரோனா குணப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் பாதுகாப்பு கருதி இவர்கள் மருத்துவர்கள் சில நாட்கள் தனிமையில் இருந்தனர். சில நாட்கள் இவர்கள் கண்காணிப்பில் இருந்தனர். இந்த நிலையில் தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

மொத்தமாக செல்கிறார்கள்

மொத்தமாக செல்கிறார்கள்

இப்படி ஒரே நாளில் பலர் மொத்தமாக தமிழகத்தில் சேர்த்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவது வழக்கம்தான். கரூரில் ஒரே நாளில் 120 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட நிகழ்வுகள் கூட நடந்துள்ளது. பொதுவாக தமிழகத்தில் கொரோனா பாதிக்கும் யாருக்கும் அறிகுறியே தென்படுவது இல்லை. அவர்களுக்கு சிகிச்சையின் போதும் அறிகுறி இருப்பது இல்லை. கொரோனா வருகிறது, சிகிச்சை எடுக்கிறார்கள், டிஸ்சார்ஜ் ஆகிறார்கள்.

கொரோனா நோய்

கொரோனா நோய்

வெகு சிலர்தான் கொரோனா காரணமாக உடல் மோசமாகி பலியாகிறார்கள். இதனால் தமிழகத்தில் கொரோனா நோயாளிகளை குணப்படுத்துவது கொஞ்சம் எளிமையாக இருக்கிறது. அதேபோல் தமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு மிக சிறப்பான சிகிச்சை மற்றும் உணவு வழங்கப்படுகிறது. இதனால் தமிழகத்தில் இப்படி குணமாகும் நபர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி உள்ளது. இனியும் இது அதிகரிக்கும் என்கிறார்கள்.

கோயம்பேடு இல்லை

கோயம்பேடு இல்லை

இடையில் கோயம்பேடு காரணமாக தமிழகத்தில் கொரோனா கேஸ்கள் அதிகரித்தது. ஆனால் தற்போது இதன் வேகம் குறைய தொடங்கி உள்ளது. கோயம்பேடு காரணமாக பாதிக்கப்பட்ட பெரும்பாலான மக்கள் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டார்கள். இவர்களுக்கு சோதனைகள் செய்யப்பட்டுவிட்டது. இதனால் இனிமேல் கோயம்பேடு காரணமாக பெரிய அளவில் கேஸ்கள் வராது என்றும் கூறுகிறார்கள்.

Recommended Video

    கொரோனாவுக்கு முடிவு எப்போது? வரலாறுகள் என்ன சொல்கின்றன?
    விரைவில் மீளும்

    விரைவில் மீளும்

    தமிழகத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு இப்படி ஒரே நாளில் இத்தனை பேர் குணமாகி உள்ளனர். இதற்கு முன் கடந்த 9ம் தேதி மொத்தம் 219 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து விடுபட்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தற்போது தமிழகம் இதில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீள தொடங்கி உள்ளது. நேற்று குணமடைவோர் சதவிகிதம் 28.91% ஆக இருந்ததுசென்னையில் தற்போது குணமடையும் வேகம் அதிகரித்துள்ளது.

    English summary
    Coronavirus: Number of discharges suddenly increasing in Tamilnadu- Here is the reason.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X