80 ஆயிரத்தை தாண்டிய பலி எண்ணிக்கை.. உலகம் முழுக்க 14 லட்சம் பேர் பாதிப்பு.. கொரோனா தீவிரம் அடைகிறது!
உலகம் முழுக்க 14,25,932 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
சென்னை: உலகம் முழுக்க 14,25,932 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். உலகம் முழுக்க 81,987 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர்.
Recommended Video
கொரோனாவின் வேகம் நாளுக்கு நாள் உலகம் முழுக்க அதிகரித்து வருகிறது. இதை குணப்படுத்துவதற்கான அறிகுறிகள் இதுவரை தெரியவில்லை. உலகம் முழுக்க 175 நாடுகளில் கொரோனா தீவிரமாக பரவி உள்ளது. மொத்தம் 3,01,828 பேர் இதுவரை உலகம் முழுக்க குணப்படுத்தப்பட்டுள்ளனர்.
நேற்று ஒரே நாளில் 7500 பேர் உலகம் முழுக்க கொரோனாவால் பலியாகி உள்ளனர்.கொரோனா காரணமாக அமெரிக்காவில் 395,739 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.அமெரிக்காவில் 12805 பேர் பலியாகி உள்ளனர்.

அமெரிக்காவில் நிலை என்ன
நேற்று அமெரிக்காவில் புதிதாக 28785 பேருக்கு கொரோனா தாக்கியுள்ளது.அமெரிக்காவில் ஒரே நாளில் கொரோனா காரணமாக 1120 பேர் பலியாகி உள்ளனர். உலகிலேயே அமெரிக்காவில்தான் அதிக நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு நியூயார்க்கில் மட்டும் கொரோனா காரணமாக 5489 பேர் பலியாகி உள்ளனர். 138,863 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

ஸ்பெயினில் எப்படி உள்ளது
ஸ்பெயினில் 141,942 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஸ்பெயினில் 14105 பேர் பலியாகி உள்ளனர். ஸ்பெயின் நாளுக்கு நாள் புதிய கேஸ்களை சந்தித்து வருகிறது. ஸ்பெயினில் கொரோனா அமெரிக்காவை விட குறைவான வேகத்திலேயே பரவி வருகிறது. அங்கு ஒரு நாளுக்கு சராசரியாக 5000 பேர் கொரோனாவால் பாதிக்கப்படுகிறார்கள்.

மோசமான நிலையில் இத்தாலி
இத்தாலியில் 135,586 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 17177 பேர் பலியாகி உள்ளனர். இத்தாலியில் நேற்று மட்டும் 3039 பேருக்கு கொரோனா ஏற்பட்டது.நேற்று மட்டும் இத்தாலியில் 604 பேர் பலியானார்கள், ஸ்பெயினில் 704 பேர் பலியானார். உலகிலேயே இத்தாலியில்தான் அதிகமான நபர்கள் கொரோனாவால் பலியாகி உள்ளனர். ஸ்பெயினில் இன்னும் சில நாட்களில் பலி எண்ணிக்கையில் இத்தாலியை முந்தும்.

ஜெர்மனி நிலை மோசம்
ஜெர்மனியில் 107,663 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 2016 பேர் பலியாகி உள்ளனர். பிரான்சில் 109,069 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 10328 பேர் பலியாகி உள்ளனர். ஈரானில் 60,500 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 3739 பேர் பலியாகி உள்ளனர். சீனாவில் 81,740 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 3331 பேர் பலியாகி உள்ளனர். சீனாவில் இரண்டாவது நாளாக கொரோனா காரணமாக யாரும் பலியாகவில்லை.

சீனாவில் இயல்பு நிலை
சீனாவில் வேகமாக இயல்பு நிலை திரும்பி உள்ளது. சீனாவில் வுஹன் நகரம் திறக்கப்பட்டு உள்ளது. சீனாவில் 77,167 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். அங்கு 1242 பேர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். யுனைட்டட் கிங்டமில் 55,242 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 6159 பேர் பலியாகி உள்ளனர். துருக்கியில் 34,109 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 725 பேர் பலியாகி உள்ளனர். சுவிசில் 22,253 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 821 பேர் பலியாகி உள்ளனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications