சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா.. தமிழகம் வருகிறது கூடுதல் முக கவசங்கள்.. பீதி கிளப்பினால் நடவடிக்கை.. அரசு முடிவு

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், அதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில், இன்று சென்னையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

Recommended Video

    Corona Virus: வெயிலுக்கு கொரோனா வைரஸ் பரவாதா? உண்மை என்ன?

    தமிழகத்தில் இதுவரை ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை, தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இல்லாத நிலையில், முதல் முறையாக தமிழகத்திலும் கொரோனா வைரஸ் கால் பதித்தது.

    Coronavirus precaution meeting held by Chief Minister Edappadi Palanisamy

    இந்த நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் இன்று காலை ஆலோசனை நடத்தி வருகிறார். இதில் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் மற்றும் மூத்த அமைச்சர்கள், சுகாதாரத்துறை அரசு செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    ராஜ்யசபா சீட்.. வாசனை வைத்து அதிமுக கொடுத்த அதிர்ச்சி வைத்தியம்.. கொந்தளிப்பில் தேமுதிகராஜ்யசபா சீட்.. வாசனை வைத்து அதிமுக கொடுத்த அதிர்ச்சி வைத்தியம்.. கொந்தளிப்பில் தேமுதிக

    கொரோனா மேலும் பரவாமல் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், போதிய மருந்து மாத்திரைகள் தயார் நிலையில் உள்ளனவா என்பது பற்றியும் முதல்வர், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். ஆலோசனைக்கு பிறகு நிருபர்களிடம் விஜய பாஸ்கர் கூறியதாவது:

    Coronavirus precaution meeting held by Chief Minister Edappadi Palanisamy

    தமிழகத்தில் மேலும் 4 இடங்களில் கொரோனா வைரஸ் பரிசோதனை மையங்களை அமைக்க திட்டமிட்டுள்ளோம். சமூக வலைத்தளங்களில், கொரோனா பாதிப்பு பற்றி வதந்தி பரப்புவோர் மீது அரசு நடவடிக்கை எடுக்கப்படும். ஊடகங்கள் சரியான செய்திகளை வெளியிட்டு வருகின்றன. எனவே சமூக வலைத்தளங்களில் வெளியாகும் செய்திகளை மக்கள் நம்ப வேண்டாம்.

    கூடுதலாக முகக் கவசங்கள், பாதுகாப்பு சாதனங்கள் வாங்குவதற்கு முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். கொரோனா தடுப்பு விழிப்புணர்வு குறித்த அரசின் குறும்படம் இன்று, மாலை அரசால் வெளியிடப்படும். இவ்வாறு விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

    இதனிடையே இன்று சட்டசபை வருகை தந்த அனைத்து எம்எல்ஏக்களுக்கும், சேனிட்டைசர் கொடுக்கப்பட்டு, கை கழுவிய பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

    English summary
    With the coronavirus being detected in Tamil Nadu, a meeting was held in Chennai today under the leadership of Chief Minister Edappadi Palanisamy.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X