மே 3ம் தேதிக்கு தயாராக திட்டம்.. தமிழகத்தில் திடீரென தீவிரமாகும் கட்டுப்பாடுகள்.. என்ன காரணம்?

தமிழகத்தில் சில மாவட்டங்களில் மட்டும் திடீரென்று கொரோனா கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் சில மாவட்டங்களில் மட்டும் திடீரென்று கொரோனா லாக் டவுன் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

Recommended Video

    மே 3ம் தேதிக்கு தயாராக திட்டம்... திடீர் அறிவிப்புக்கு என்ன காரணம்?

    கொரோனா காரணமாக நாடு முழுக்க ஊரடங்கு போடப்பட்டுள்ளது. மே 3ம் தேதி வரை இந்த ஊரடங்கு அமலில் இருக்கும். மே 3ம் தேதிக்கு பிறகு ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக அரசு முடிவெடுக்க உள்ளது.

    இந்த நிலையில் தமிழகத்திலும் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்று கேள்வி எழுந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1683 ஆக அதிகரித்துள்ளது. ஆனால் தமிழகத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை 752ஆக அதிகரித்துள்ளது.

    கட்டுப்பாடுகள் அதிகரிப்பு

    கட்டுப்பாடுகள் அதிகரிப்பு

    இந்த நிலையில் தமிழகத்தில் சில மாவட்டங்களில் மட்டும் திடீரென்று கொரோனா லாக் டவுன் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக பெரு நகரங்களில் மட்டும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி நேற்று சென்னையில் அண்ணாசாலை மொத்தமாக மூடப்பட்டது. இதையடுத்து தற்போது சென்னை, கோயம்புத்தூர், மதுரை ஆகிய முக்கியமான மூன்று மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது;

    கடுமையான கட்டுப்பாடுகள்

    கடுமையான கட்டுப்பாடுகள்

    இந்த மூன்று மாவட்டங்களிலும் 26ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை கடுமையான கட்டுப்பாடுகளுடன் கூடிய முழுமையான ஊரடங்கு கடைபிடிக்கப்படுமென அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதேபோல் திருப்பூர், சேலம் ஆகிய மாவட்டங்களில் 26ஆம் தேதி முதல் 28ஆம் தேதி இரவு 9 மணி வரை ஊரடங்கு மிக கடுமையாக கடைபிடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இது போக சேலத்தில் ஏப்ரல் 25, 26 ஆகிய இரு நாட்களிலும் முழுமையான ஊரடங்கை கடைப்பிடிக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

    கடைகள் செயல்படாது

    கடைகள் செயல்படாது

    இந்த நாட்களில் கடைகள் எதுவும் செயல்பாடது. மக்கள் வெளியே வர கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். முக்கியமாக சேலம் முழுக்க அனைத்து கடைகளும் இந்த நாட்களில் மொத்தமாக மூடப்படும். யாரும் வெளியே பொருட்கள் வாங்க வர முடியாது. சென்னையில் பொருட்களை வீட்டில் டெலிவரி செய்ய மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மாறாக மக்கள் அடிப்படை தேவைகளுக்கு கூட இந்த நாட்களில் வெளியே வர முடியாது.

    என்ன காரணம்

    என்ன காரணம்

    பெரு நகரங்களில் இப்படி திடீர் என்று கட்டுப்பாடுகள் அதிகரிக்க காரணங்கள் உள்ளது . முதல் விஷயம் சென்னை, சேலம், திருப்பூர், கோயம்புத்தூர், மதுரை ஆகியவை தமிழகத்தில் மிகவும் முக்கியமான மாவட்டங்களாகும். தமிழகத்தின் பொருளாதாரத்தில் இந்த மாவட்டங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது.இந்த மாவட்டங்களை நீண்ட நாட்களுக்கு மூடி வைக்க முடியாது. இந்த மாவட்டங்களில் மே 3ம் தேதிக்கு மேலும் ஊரடங்கை பிறப்பிக்க முடியாது.

    தமிழகத்தின் பொருளாதாரம் பாதிக்கும்

    தமிழகத்தின் பொருளாதாரம் பாதிக்கும்

    அப்படி செய்தால் தமிழகத்தின் பொருளாதாரம் பெரிய அளவில் பாதிக்கும். இதனால் இங்கு உடனடியாக கொரோனாவை கட்டுபடுத்த வேண்டும். மே 3ம் தேதிக்கு முன் இங்கு கொரோனா பரவுவதை மொத்தமாக கட்டுப்படுத்த வேண்டும். அதற்கு ஒரே வழி உடனடியாக இங்கு கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டும். மே 3ம் தேதிக்குள் எவ்வளவு இறுக்கிப்பிடித்து கட்டுப்பாடுகளை அதிகரிக்க முடியுமோ அவ்வளவு இறுக்கமாக செயல்பட வேண்டும்.

    தீவிரம் காட்டுகிறார்கள்

    தீவிரம் காட்டுகிறார்கள்

    இதனால்தான் இந்த மாவட்டங்களில் வரும் நாட்களில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட உள்ளது. மே 3ம் தேதிக்கு பிறகு ஊரடங்கை நீக்க வேண்டும் என்பதற்காக இப்போதே அங்கு முடிந்த அளவு கட்டுப்பாடுகளை விதித்து தீவிரம் காட்டுகிறார்கள். இனி வரும் நாட்களில் இந்த மாவட்டங்களில் மட்டும் அதிகமாக கொரோனா சோதனைகள் செய்யப்படும். இந்த மாவட்டங்களில் மட்டும் தீவிரமாக கொரோனா பணிகள் சில நாட்களுக்கு கூடுதலாக நடக்கும் என்று கூறுகிறார்கள்.

    அதிகமாக கொரோனா சோதனைகள்

    அதிகமாக கொரோனா சோதனைகள்

    ஆம் இனி வரும் நாட்களில் இந்த 5 மாவட்டங்களில் தீவிரமாக கொரோனா சோதனைகள் செய்யப்படும். இதற்கு இன்னொரு காரணமும் உள்ளது.இந்த மாவட்டங்களில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது. சென்னையின் 400 பேருக்கு கொரோனா உள்ளது .கோவையில் 134, சேலத்தில் 29, திருப்பூரில் 110, மதுரையில் 59 பேருக்கு கொரோனா உள்ளது.

    ஆபத்தான மாவட்டங்கள்

    ஆபத்தான மாவட்டங்கள்

    தமிழகத்தின் மிக முக்கியமான பகுதிகள் என்று கருதப்படும் மாவட்டங்கள் இப்படி கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு இருப்பது கொஞ்சம் ஆபத்தானது. வளர்ந்த மாவட்டங்கள் இப்படி ஹாட் ஸ்பாட் பகுதிகளாக மாறுவது பெரிய சிக்கலை உண்டாக்கும். இதை தடுக்கும் வகையில் மொத்தமாக கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. மக்களே இங்கே வெளியே வருவது தீவிரமாக கண்காணிக்கப்படும் என்று கூறுகிறார்கள்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+