தமிழகம் முழுக்க.. ஒரே நாளில் 3827 பேருக்கு கொரோனா.. பாதிப்பு குறைந்தாலும், அதிகரித்த பலி எண்ணிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் இன்று 3827 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று 1747 பேருக்கு கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது. சென்னையில் 3வது நாளாக 2000த்துக்கும் குறைவானோருக்கு கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் மேலும் 61 பேர் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது. வைரஸ் தொற்றுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1571 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று, மேலும் 3827 பேருக்கு கொரோனா தொற்று பதிவாகியுள்ளதால், தமிழகத்தில், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,14,978 ஆக உயர்ந்துள்ளது.

இணை நோய்கள் இல்லை

இணை நோய்கள் இல்லை

இன்று உயிரிழந்த 61 பேரில், 8 பேருக்கு இணை நோய்கள் எதுவும் இல்லை. எஞ்சிய 53 பேருக்கு, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பிரச்சினைகள் இருந்தன. சென்னையில் மட்டும் கொரோனாவால் இதுவரை 1,082 பேர் உயிரிழந்துள்ளனர். நான்கு நாட்களுக்கு பிறகு 4 ஆயிரத்திற்கு குறைவாக கொரோனா பதிவானாலும், பலி எண்ணிக்கை அதிகரிப்பது சரியில்லை என்கிறார்கள் மருத்துவ வல்லுநர்கள்.

டிஸ்சார்ஜ்

டிஸ்சார்ஜ்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,793 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இருப்பினும், தற்போது ஊரடங்கு தளர்வு அறிமுகப்படுத்துள்ளதால், இனிமேல் நோய் பரவலை குறைக்க வேண்டியது அவசியம்.

4 நாட்களுக்கு பிறகு

4 நாட்களுக்கு பிறகு

4 நாட்களுக்கு பிறகு தமிழகத்தில் குறைந்துள்ளது கொரோனா பாதிப்பு. கடந்த 4 நாட்களாக கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை தாண்டியது.
இன்று 4 ஆயிரத்துக்கும் குறைவாக பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது.

குறைகிறது

குறைகிறது

தமிழகத்தில், 46833 பேர் கொரோனாவால் இன்னும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். காய்ச்சல் க்ளீனுக்குகள் போன்றவை செயல்பட தொடங்கியுள்ளது, கொரோனா குறைப்புக்கு முக்கிய பங்கு வகித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+