பரவிய கொடூர கொரோனா வைரஸ்.. தென்னிந்தியாவில் 3 மாநிலம்.. சென்னைக்கும் வருகிறதா? உண்மை என்ன?
கொரோனா வைரஸ் தென்னிந்தியாவில் மூன்று மாநிலங்களில் பரவி உள்ளதாக அச்சம் ஏற்பட்டுள்ள நிலையில், சென்னையிலும் இந்த வைரஸ் பரவி இருக்கலாம் என்று அச்சம் நிலவி வருகிறது.
Recommended Video
சென்னை: கொரோனா வைரஸ் தென்னிந்தியாவில் மூன்று மாநிலங்களில் பரவி உள்ளதாக அச்சம் ஏற்பட்டுள்ள நிலையில், சென்னையிலும் இந்த வைரஸ் பரவி இருக்கலாம் என்று அச்சம் நிலவி வருகிறது.
கொரோனா வைரஸ் அச்சம் உலகம் முழுக்க பரவி வருகிறது. சீனாவில் வுஹன் நகரத்தில் தோன்றிய இந்த வைரஸ் ஒரு மனிதரில் இருந்து இன்னொரு மனிதருக்கு பரவ கூடியது. கொரோனா வைரஸ் காரணமாக மொத்தமாக சீனாவில் வுஹன் நகரம் மூடப்பட்டுள்ளது.
இந்த கோரோனா வைரஸ் காரணமாக சீனாவில் 46 பேர் பலியாகி உள்ளனர். 1100 பேர் கோரோனா வைரஸ் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்தியா
இந்த வைரஸ் அங்கு சுற்றி, இங்கு சுற்றி தற்போது பெங்களூர், கேரளா வரை வந்துவிட்டது. கேரளாவில் 7 பேருக்கு இதற்கான அறிகுறிகள் இருப்பதாக செய்திகள் வந்துள்ளது. இந்த 7 பேரை தற்போது தனி அறையில் வைத்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். அதேபோல் பெங்களூர், ஹைதராபாத்தில் பாதிக்கப்பட்ட 2 பேரையும் தனியாக வைத்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். இவர்களுக்கு நோய் தாக்கியது இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

தென்னிந்தியா எப்படி
தென்னிந்தியாவில் உள்ள ஐந்து மாநிலங்களில் மூன்று மாநிலங்களின் தலைநகரில் கொரோனா வைரஸ் அறிகுறி தென்பட்டுள்ளது. தென்னிந்தியாவில் மட்டும் 9 பேர் இந்த அறிகுறியோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மிக தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இப்போது தென்னிந்தியாவில் மிச்சம் இருப்பது ஆந்திர பிரதேசமும், தமிழகம்தான். இதனால் இங்கு தீவிர கண்காணிப்புகள் நடந்து வருகிறது.

சென்னை நிலை
அதன்படி சென்னையில் விமான நிலையங்களில் தீவிரமாக மருத்துவ சோதனைகள் நடந்து வருகிறது. விமான நிலையத்திற்கு வெளிநாட்டில் இருந்து வரும் மக்கள் கடுமையாக சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறார்கள். முக்கியமாக சீனாவில் இருந்து வரும் மக்களும், ஹான்காங், ஜப்பானில் இருந்து வரும் மக்களும் அதிகம் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறார்கள். இதுவரை சென்னையில் இந்த நோய் அறிகுறியோடு யாரும் வரவில்லை.

தமிழகம் எப்படி
அதேபோல் சென்னையில் நேரடியாகவும் இந்த நோய் அறிகுறியோடு யாரும் அனுமதியாகவில்லை. இதனால் சென்னை மக்கள் யாரும் அச்சம் கொள்ள வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது. மருத்துவமனை நிர்வாகம், ஜலதோஷ அறிகுறியோடு அனுமதி ஆகும் எல்லோரையும் தீவிரமாக சோதனை செய்து வருகிறது. தமிழகத்தில் எங்கும் யாருக்கும் கொரோனா வைரஸ் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications