தமிழகத்தில் ஒரே நாளில் திடீரென குறைந்த கொரோனா கேஸ்கள்.. எப்படி சாத்தியமானது.. இதுதான் பின்னணி!
சென்னை: தமிழகத்தில் இன்று திடீர் என்று கொரோனா கேஸ்கள் எப்படி குறைந்தது, இதற்கு காரணம் என்ன என்று கேள்வி எழுந்துள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா கேஸ்கள் தீவிரமாக அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் இன்று 646 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17,082 லிருந்து 17,728ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் இருந்து மட்டும் 509 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11,640 ஆக உயர்ந்துள்ளது.

தினமும் வரும் கேஸ்கள்
கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் தினமும் அதிகமாக கேஸ்கள் பதிவாகி வந்தது. தமிழகத்தில் கடந்த மே 20ம் தேதி 743 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. அதன் பிறகு 21ம் தேதி 776 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. 22ம் தேதி 786 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. 23ம் தேதி 759 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. 24ம் தேதி 759 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. அதன்பின் 25ம் தேதி 805 பேருக்கு கொரோனா ஏற்பட்டது.

இன்று கேஸ்கள் வரவில்லை
ஆனால் இன்று அந்த அளவிற்கு கேஸ்கள் வரவில்லை. இன்று மொத்தம் 646 கேஸ்கள் மட்டுமே தமிழகத்தில் ஏற்பட்டது. 700 கேஸ்கள் சராசரியாக ஏற்பட்டு வந்த நிலையில் இன்று அப்படி ஏற்படவில்லை. தமிழகத்தில் இன்று திடீர் என்று கொரோனா கேஸ்கள் எப்படி குறைந்தது. இதற்கு காரணம் என்ன என்று கேள்வி எழுந்துள்ளது. ஆனால் இதற்கு காரணம் குறைவான டெஸ்டிங்தான் என்று கூறுகிறார்கள்.

என்ன காரணம்
தமிழகம் தினமும் சராசரியாக 13000 கொரோனா மாதிரிகள் சோதனை செய்யப்படும். நபர்கள் அடிப்படையில் பார்த்தால் மொத்தம் 12 ஆயிரம் சோதனைகள் செய்யப்படுகிறது. ஆனால் இன்று கொரோனா சோதனைகள் குறைவாக செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று 9677 பேருக்கு மட்டுமே கொரோனா சோதனைகள் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று 10289 மாதிரிகள் சோதனைகள் செய்யப்பட்டுள்ளது.

டெஸ்ட் காரணம்
தினமும் செய்யப்படும் சோதனை எண்ணிக்கையை விட இன்று குறைவான சோதனைதான் செய்யப்பட்டுள்ளது. இதனால்தான் இன்று கேஸ்கள் குறைவாக வந்துள்ளது என்று கூறுகிறார்கள். இதற்கு நிறைய காரணம் சொல்லப்பட்டுள்ளது. அதன்படி இன்று தமிழகத்திற்கு வெளிமாநிலத்தில் இருந்து குறைவான நபர்களே தமிழகம் வந்துள்ளனர். இதனால் இன்று குறைவான டெஸ்டிங் செய்யப்பட்டு இருக்கலாம்.

தகுதியான நபர்கள் இல்லை
தமிழகத்தில் கொரோனா சோதனை செய்ய தகுதியான நபர்கள் குறைவாக உள்ளனர் என்பதும் இதற்கு ஒரு காரணம் ஆகும். அதாவது ஒருவருக்கு கொரோனா சோதனை செய்ய வேண்டும் என்றால் அதற்கு சில வரையறை இருக்கிறது. கொரோனா அறிகுறி, கொரோனா உள்ள நபருடன் தொடர்பு கொண்டது, காண்டாக்ட் டிரேசிங்கில் கண்டுபிடிக்கப்பட்ட நபர்கள் என்று நிறைய வரையறை இருக்கிறது. இன்று இந்த வரையறைக்குள் வந்த நபர்கள் குறைவாக இருந்தனர் என்பதால் சோதனையும் குறைவாக செய்யப்பட்டுள்ளது.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்?












Click it and Unblock the Notifications