ஷாக்கிங்.. தமிழகத்தில் ஒரே நாளில் 1149 பேருக்கு கொரோனா.. கோர தாண்டவம் ஆடும் வைரஸ் பரவல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் 1149 பேருக்கு கொரோனா கேஸ்கள் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்த பாதிப்பு 22333 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கட்டுக்கடங்காத வேகத்தில் கொரோனா கேஸ்கள் பரவி வருகிறது. தினமும் 700+ கேஸ்கள் தமிழகத்தில் வந்து கொண்டு இருக்கிறது. இதில் கடந்த 3 நாட்களாக தினமும் 800+ கேஸ்கள் தமிழகத்தில் வந்தது.

தமிழகத்தில் தினமும் சராசரியாக 10000-11000 பேருக்கு கொரோனா சோதனைகள் செய்யப்பட்டு வருகிறது. ஆனாலும் கூட தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா கேஸ்கள் அதிகமாக வந்து கொண்டு இருக்கிறது.

தமிழகம் நிலை

தமிழகம் நிலை

இந்த நிலையில் தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் 1149 பேருக்கு கொரோனா கேஸ்கள் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்த பாதிப்பு 22333 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் வெளி மாநிலத்தில் இருந்து வந்த பலருக்கு இன்று கொரோனா ஏற்பட்டுள்ளது. வெளி மாநிலத்தில் இருந்து வந்த 95 பேருக்கு இன்று தமிழகத்தில் கொரோனா ஏற்பட்டுள்ளது.

சென்னை எப்படி

சென்னை எப்படி

சென்னையில் மட்டும் இன்று மொத்தமாக 804 கேஸ்கள் வந்துள்ளது. சென்னையில் இதுவரை வந்ததில் இதுதான் அதிகமான எண்ணிக்கை ஆகும். சென்னையில் கொரோனா தீவிரம் அடைந்துள்ளது இதன் மூலம் உறுதியாகி உள்ளது .சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 14802 ஆக உயர்ந்துள்ளது .

டிஸ்சார்ஜ் எத்தனை

டிஸ்சார்ஜ் எத்தனை

தமிழகத்தில் மொத்தம் இன்று 757 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு இருக்கிறார்கள். தமிழகத்தில் மொத்தம் 12757 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு இருக்கிறார்கள். தமிழகத்தில் இன்று 12089 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தமாக 491962 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆக்டிவ் கேஸ்களில் எண்ணிக்கை 9400 ஆக உள்ளது.

பலி எண்ணிக்கை

பலி எண்ணிக்கை

அதேபோல் பலி எண்ணிக்கை ரீதியாகவும் இன்று அதிகமான நபர்கள் பலியாகி உள்ளனர். இன்று மட்டும் தமிழகத்தில் 13 பேர் பலியாகி உள்ளனர். இதில் சிலர் 40 வயதுக்கும் குறைவான நபர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் மொத்த பலி எண்ணிக்கை 173 ஆக உயர்ந்துள்ளது.

மிக மோசம்

மிக மோசம்

தமிழகத்தில் இப்படி ஒரே நாளில் 1000+ கேஸ்கள் வந்திருப்பது மிகவும் அதிர்ச்சியான விஷயமாக பார்க்கப்படுகிறது. இதனால் தமிழகத்தில் ஸ்டேஜ் 3 பரவல் தீவிரம் அடைந்து விட்டதா என்றும் கேள்வி எழுந்துள்ளது. அதேபோல் தமிழகத்தில் இன்னும் கூடுதலாக கொரோனா சோதனைகள் செய்தால் இன்னும் அதிகமாக கேஸ்கள் வர வாய்ப்புள்ளது. தமிழகத்தில் தளர்வுகள் அமலாக உள்ள நிலையில் இப்படி கேஸ்கள் அதிகம் ஆவது அதிர்ச்சி அளிக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+