இதுதான் நேரம்.. தமிழ்நாடு அரசு சுதாரிக்க வேண்டும்.. சுற்றிவளைத்த ஓமிக்ரான்.. மீண்டும் லாக்டவுன்?
சென்னை: தென்னிந்திய மாநிலங்களில் தொடர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக ஓமிக்ரான் கொரோனா கேஸ்கள் அதிகரிக்க தொடங்கி உள்ளது. தமிழ்நாட்டிற்கு இது ஒரு எச்சரிக்கை மணியாக பார்க்கப்படுகிறது.
தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஓமிக்ரான் கொரோனா தற்போது உலகம் முழுக்க 40க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிக்கொண்டு இருக்கிறது. டெல்டாவை விட வேகமாக பரவும் தன்மை கொண்டதாக ஓமிக்ரான் கருதப்படுகிறது.
ஆனால் ஓமிக்ரான் காரணமாக அதிகமான நபர்கள் பாதிக்கப்பட்டாலும் இதனால் ஏற்படும் பலி எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.

ஆபத்து
ஓமிக்ரான் அவ்வளவு ஆபத்து கொண்டதாக இதுவரை தெரியவில்லை. ஆனால் வயதானவர்களை இது தாக்கும் போது அதனால் மோசமான பாதிப்புகள் ஏற்படலாம் என்று உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதோடு வேக்சினின் எதிர்ப்பு திறனை இது மட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டதாக இருப்பதாகவும் ஓமிக்ரான் குறித்து உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஓமிக்ரான் கொரோனா
இந்த நிலையில் இந்தியாவில் ஓமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கையின் 38 ஆக உயர்ந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமைக்கு முந்தைய வெள்ளிக்கிழமையில் இந்தியாவில் வெறும் 2 ஓமிக்ரான் கேஸ்கள் மட்டுமே இருந்தது. அதன்பின் சரசரவென அதிகரித்து கேஸ்கள் தற்போது குஜராத், மகாராஷ்டிரா என்று பல்வேறு மாநிலங்களில் பரவ தொடங்கி உள்ளது.

பரவல்
இந்தியாவில் இப்போது வரை 38 ஓமிக்ரான் கேஸ்கள் உள்ளன. நேற்று மட்டும் 5 ஓமிக்ரான் கேஸ்கள் கண்டறியப்பட்டன. மஹாராஷ்டிரா, சண்டிகர், ஆந்திர பிரதேசம், கர்நாடகா, கேரளாவில் கேஸ்கள் கண்டறியப்பட்டன. ஓமிக்ரான் கொரோனா நேற்று முதல்முறையாக ஆந்திர பிரதேசம், கேரளாவில் கண்டறியப்பட்டது. மகாராஷ்டிராவில் நேற்று 18வது ஓமிக்ரான் கேஸ் கண்டறியப்பட்டது.

ஓமிக்ரான் தமிழ்நாடு
கிட்டத்தட்ட தற்போது ஓமிக்ரான் மூலம் தமிழ்நாட்டின் எல்லைகள் சுற்றி வளைக்கப்பட்டுவிட்டது. ஒரு பக்கம் கர்நாடகா, இன்னொரு பக்கம் ஆந்திரா, இந்த பக்கம் கேரளா என்று ஓமிக்ரான் கேஸ்கள் எல்லை மாநிலங்களில் எல்லாம் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது. இதன் மூலம் ஓமிக்ரான் வேகமாக பரவும் தன்மை கொண்டது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதோடு நேற்று கர்நாடகாவில் மூன்றாவதாக ஒருவருக்கு ஓமிக்ரான் கண்டறியப்பட்டது.

எல்லை மூடல்
இதனால் தமிழ்நாட்டில் மீண்டும் புதிய கட்டுப்பாடுகளை கொண்டு வர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மொத்தமாக லாக்டவுன் தேவை இல்லை என்றாலும், எல்லைகளை முதலில் மூடலாம். மீண்டும் இ பாஸ் நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். அதேபோல் தனிமைப்படுத்துதல் விதிகளை கடுமையாக்கலாம். வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு கட்டுப்பாடுகளை அதிகரிக்கலாம்.

கட்டுப்பாடுகள்
தமிழ்நாட்டில் இதுவரை கேஸ்கள் பதிவாகவில்லை. எல்லை மாநிலங்களில் கேஸ்கள் பதிவாகிவிட்டது. இப்படிப்பட்ட நேரத்தில் மாநிலங்களுக்கு இடையே போக்குவரத்து தொடர்ந்து நடைமுறையில் இருப்பது ஓமிக்ரான் கொரோனா பரவ வழி வகுக்கும். இதனால் அரசு உடனடியாக கட்டுப்பாடுகளை கொண்டு வர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.
Recommended Video

ஓமிக்ரான் வரும் முன்
ஓமிக்ரான் வந்த பின் அதை தடுக்க முயல்வதை விட, முடிந்த அளவு வராமல் தடுப்பதே சிறப்பான கட்டுப்பாடாக இருக்கும். அதேபோல் மக்களும் தாங்கள் மறந்து போன மாஸ்க் கலாச்சாரத்தை மீண்டும் கையில் எடுக்க வேண்டும். மீண்டும் மாஸ்க் அணிவதை தீவிரமாக கடைபிடிக்க வேண்டும். அதேபோல் பொது இடங்களில் தனிமனித இடைவெளி விட வேண்டும். கேரளா வரை வந்த ஓமிக்ரான் களியக்காவிளை தாண்டி தமிழ்நாடு வர நீண்ட நேரம் ஆகாது என்பதால் மக்கள் இப்போதே சுதாரிக்க வேண்டும்!
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications