பண்டிகை நாள் வசூலை தாண்டும்.. ரெக்கார்ட் வைக்க போகுது.. பெரிய வருமானத்தை எதிர்நோக்கும் டாஸ்மாக்!

இன்று தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் பெரிய அளவில் வசூல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்று தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் பெரிய அளவில் வசூல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Recommended Video

    டாஸ்மாக் கடைகளை திறக்க தயாரான தமிழகம்

    கொரோனா பாதிப்பு தீவிரம் அடைந்துள்ளதால் நாடு முழுக்க மே 17 வரை ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது. அதே சமயம் மதுவிற்பனை கடைகள், பான் மசாலா கடைகள் இயங்க அனுமதி அளித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    தமிழகத்தில் அனைத்து மண்டலங்களிலும் மதுபான கடைகள் திறக்கப்பட உள்ளது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த டாஸ்மாக் கடைகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சென்னை மற்றும் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட கட்டுப்பாட்டு பகுதிகளில் மதுக்கடைகள் திறக்கப்படாது.

    பண்டிகை தினம்

    பண்டிகை தினம்

    தமிழகத்தில் எப்போதும் பொதுவாக பண்டிகை நாட்கள் வந்தால் மது விற்பனை அதிகரிக்கும். மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில்தான் ரெக்கார்ட் வைக்கும் அளவிற்கு மதுவிற்பனை அதிகமாக இருக்கும் . தமிழகத்தின் முக்கியமான வருவாய் டாஸ்மாக் கடைகளை நம்பித்தான் இருக்கிறது. அரசின் பெரும்பாலான நலத்திட்டங்கள் டாஸ்மாக் வருமானத்தை நம்பித்தான் இருக்கிறது. மது ஒரு பக்கம் கேடு என்றாலும் இதுதான் நிலை.

    அதிக வருமானம்

    அதிக வருமானம்

    இதனால்தான் தற்போது தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை திறக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா ஊரடங்கு காரணமாக தமிழக அரசின் வருவாய் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ளதால், வருவாய் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பும். இன்று தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் பெரிய அளவில் வசூல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பீர் வகை அதிகம் விற்பனை

    பீர் வகை அதிகம் விற்பனை

    தமிழகத்தில் தீபாவளி, பொங்கல், புத்தாண்டு நாட்களில் அதிகமாக மது விற்பது வழக்கம். காலையில் இருந்து மாலை வரை தமிழகத்தில் மது விற்பனை மாஸாக நடக்கும். முக்கியமாக தமிழகத்தில் பீர் வகைகள் அதிகம் விற்பனை ஆகும். தற்போது ஆண்கள், பெண்கள் இடையே பீர் குடிப்பது அதிகரித்துள்ளது. இதனால் பீர் அதிகம் விற்பனை ஆகும். வோட்கா, விஸ்கி வகைகளும் அதிகமாக விற்பனை ஆகும்.

    புத்தாண்டு

    புத்தாண்டு

    கடந்த டிசம்பர் 31-ந்தேதி மற்றும் ஜனவரி 1-ந்தேதி ஆகிய 2 நாட்களில் தமிழகத்தில் டாஸ்மாக் மூலம் 320 கோடி ரூபாய் வரை வருமானம் வந்தது. கடந்த வருடம் 250 கோடி ரூபாய் வரை வருமானம் வந்தது. இப்படி வருடா வருடம் வருமானம் அதிகமாகிக் கொண்டே செல்வது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்றும் நாளையும் தமிழகத்தில் 200 கோடி ரூபாய்க்கு வருமானம் வர வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

    எவ்வளவு கோடி

    எவ்வளவு கோடி

    தமிழகத்தில் 40 நாட்களாக யாரும் குடிக்கவில்லை. அதனால் இன்று கடைகள் திறந்ததும் எல்லோரும் வரிசையாக வந்து குடிக்க போகிறார்கள். மக்கள் பலர் வரிசையாக வந்து குடிக்க போகிறார்கள். இதனால் வருமானம் அதிகமாக இருக்கும். ஆனால் சென்னையில்தான் தமிழகத்திலேயே மது விற்பனை அதிக அளவில் நடக்கும். ஆனால் சென்னையில் தற்போது டாஸ்மாக் திறக்கவில்லை.

    வருவாய் குறையும்

    வருவாய் குறையும்

    இதனால் கொஞ்சம் வருவாய் குறையும். ஆனாலும் மற்ற இடங்களில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் வசூல் அதிகமாக இருக்கும் என்று கூறுகிறார்கள். டாஸ்மாக் இதற்கு அதிகாரபூர்வமாக இலக்கு எதுவும் நிர்ணயிக்கவில்லை. ஆனாலும் எப்படியும் இன்று தமிழகம் ரெக்கார்ட் வைக்கும் என்கிறார்கள். கர்நாடகாவில் முதல் நாள் மதுக்கடை வசூல் 96 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+