இதுதான் தற்போது பிரச்சனை.. வேகமாக அதிகரிக்கும் "டிபிஆர்" சதவிகிதம்.. தமிழகத்தை உலுக்கும் கொரோனா!
சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இன்னொரு பக்கம் டிபிஆர் எனப்படும் test positivity rate (TPR) நாளுக்கு நாள் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் கொரோனா கேஸ்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதேபோல் கொரோனா காரணமாக ஏற்படும் மரணங்களும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 1982 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. மொத்தம் 40698 பேர் தமிழகத்தில் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
Recommended Video
மேலும் சென்னையில் நேற்று மொத்தம் 1479 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. சென்னையில் மொத்தமாக 28924 கேஸ்கள் இதுவரை பதிவாகி உள்ளது.

டிபிஆர் என்றால் என்ன?
இந்த நிலையில் தமிழகத்தில் டிபிஆர் எனப்படும் test positivity rate (TPR) நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதாவது டிபிஆர் என்பது 100 பேருக்கு சோதனை செய்தால் அதில் எத்தனை பேருக்கு கொரோனா வருகிறது என்பதற்கான சதவிகிதம் ஆகும். ஒரு பகுதியில் 100 பேருக்கு சோதனை செய்து, அதில் அதிக பேருக்கு கொரோனா வந்தால் டிபிஆர் சதவீதம் அதிகமாக இருக்கும். டிபிஆர் அதிகமாக இருப்பது அல்லது உயர்ந்து கொண்டே செல்வது மிகவும் ஆபத்தான விஷயம் ஆகும்.

அதிகரிக்கிறது
டிபிஆர் சதவிகிதம் அதிகமாக இருந்தால் சமூக பரவலும் அதிகமாக இருக்கிறது என்று அர்த்தம் ஆகும். தமிழகத்தில் குறைவாக இருந்த டிபிஆர் சதவிகிதம் தற்போது அதிகரிக்க தொடங்கி உள்ளது. தற்போது தமிழகத்தின் டிபிஆர் 6.2% ஆக உள்ளது. ஆனால் இரண்டு நாட்களுக்கு முன் இந்த சதவிகிதம் 5.6% ஆக இருந்தது. தற்போது இது 0.6% அதிகரித்து இருக்கிறது .

வேகம் எடுக்கிறது
அதாவது 100 பேரை சோதனை செய்தால் அதில் 6.2% பேருக்கு தமிழகத்தில் கொரோனா ஏற்படுகிறது. இதுதான் கவலை அளிக்கும் விஷயமாக மாறியுள்ளது. இதனால்தான் தமிழகத்தில் கேஸ்கள் அதிகரித்து வருகிறது. இப்படி டிபிஆர் அதிகரித்து வருவதால் தமிழகத்தில் கொரோனா சமூக பரவல் அதிகம் இருக்குமோ என்று அச்சம் எழுந்துள்ளது. சென்னையில் டிபிஆர் சதவிகிதம் இதைவிட அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

மற்ற மாநிலங்கள்
மற்ற சில மாநிலங்களிலும் இந்த டிபிஆர் சதவிகிதம் அதிகமாக இருக்கிறது. மகாராஷ்டிராவில் இது 12.58%ஆக உள்ளது. டெல்லியில் 11.57% ஆக டிபிஆர் உள்ளது. குஜராத்தில் 8% ஆக டிபிஆர் உள்ளது . தமிழகம் இந்த பட்டியலில் 4ம் இடம் வகிக்கிறது. வரும் நாட்களில் இந்த டிபிஆர் சதவிகிதம் மேலும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது என்று கூறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications