ரசம் சோறு.. கொக்கெய்ன்.. சீன உணவகம்.. கொரோனா குறித்த பகீர் வதந்திகளும்.. ஷாக்கிங் உண்மைகளும்!

கொரோனா குறித்து வெளியாகி வரும் வதந்திகளும், அதன்பின் இருக்கும் உண்மைகளும் என்ன என்று இந்த கட்டுரையில் விளக்கப்பட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: கொரோனா குறித்து வெளியாகி வரும் வதந்திகளும், அதன்பின் இருக்கும் உண்மைகளும் என்ன என்று இந்த கட்டுரையில் விளக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸை கூட கட்டுப்படுத்த முடிகிறது ஆனால் இது தொடர்பாக பரவும் வதந்திகளை கட்டுப்படுத்த முடியவில்லை இதுதான் கொரோனா வைரஸ் தொடர்பான வதந்திகள் குறித்து உலக சுகாதார மையம் தெரிவித்த கருத்து. அட நம் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூட கடந்த வெள்ளிக்கிழமை சட்டசபையிலும் இதைத்தான் புலம்பலாக குறிப்பிட்டு இருந்தார்.

ஆம் அந்த அளவிற்கு கொரோனா வைரஸ் தொடர்பாக ஏராளமான வதந்திகள் இணையத்தில் தீவிரமாக பரப்பப்பட்டு வருகிறது. முக்கியமாக இந்தியாவில் வாட்ஸ் ஆப் யுனிவர் சிட்டியில் புராதான பெருமைகளை பொய்யாக பரப்பி வரும் பலர் இதை பற்றியும் வதந்திகளை பரப்பி வருகிறார்கள்.

மாட்டு சாணம்

மாட்டு சாணம்

கொரோனா தொடர்பாக பரவி வரும் வந்ததிகளில் முக்கியமான வதந்தி என்றால் அது மாட்டு சாணம் தொடர்பான வதந்திதான். மாட்டு சாணம், கோமியம் சாப்பிட்டால், குடித்தால், உடலில் பூசினால் கொரோனா வராது என்று வதந்திகள் வடஇந்தியா முழுக்க பரப்பப்படுகிறது. இது முழுக்க முழுக்க முட்டாள்தனம். மாட்டு சாணத்தை அதிகமாக உடலில் பூசினால், தோல் தொடர்பான நோய்கள் தானே வருமே ஒழிய கொரோனா எல்லாம் குணமாகாது.

முழுக்க முழுக்க தவறு

முழுக்க முழுக்க தவறு

இதனால் மாட்டு சாணம், மஞ்சள் தொடர்பாக வெளியாகும் எந்த வதந்திகளையும் மக்கள் நம்ப வேண்டாம். அதேபோல் ரசம் ஊற்றி சாப்பிட்டால் கொரோனா குணமாகும் என்று தவறான தகவல்கள் பரப்பப்படுகிறது. ரசம் சாதத்திற்கு இப்போதெல்லாம் சளியை போக்கும் திறனே இல்லை. அதனால் இது கொரோனவை குணப்படுத்தும் என்று நம்பி சாப்பிட வேண்டாம். அப்பறம் கடைசியில் உங்களுக்குதான் பிரச்சனை ஏற்படும்.

 சீனா உணவகம்

சீனா உணவகம்

அதேபோல் சீன உணவகத்தில் சாப்பிட்டால் கொரோனா வரும் என்பதும் பொய். சீன உணவகத்தில் சமைக்கும் பொருட்கள் இந்தியாவில் தயாரிக்கப்படும் உணவுகள், என்ன ஒன்று அது சீன முறையில் தயாரிக்கப்படுகிறது. அவ்வளவுதான் வித்தியாசம். சீன உணவகங்கள், உணவுகள் மூலம் வைரஸ் பரவும் என்று நிரூபிக்கப்படவில்லை. இதை நம்ப வேண்டாம்.

முழுக்க முழுக்க பொய்

முழுக்க முழுக்க பொய்

கொரோனா வைரஸ் என்பது பிளிச்சிங் பவுடர், கொக்கெயின் போதை பொருள் சேர்த்து சாப்பிட்டால் குணமாகும் என்று பொய்யான செய்தி வெளியாகி வருகிறது. இரண்டையும் சேர்த்து சாப்பிட்டால் உயிர்தானே போகுமே தவிர கொரோனா வைரஸ் போகாது. அதேபோல் மது பழக்கம் மூலம் கொரோனவை கட்டுப்படுத்தலாம் என்பதும் முழுக்க முழுக்க பொய். மது பழக்கம் இப்போதும் எப்போதும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ஒன்றுதான்!

ஆன்லைன் ஆர்டர்

ஆன்லைன் ஆர்டர்

ஆன்லைன் ஆர்டர் மூலம் வரும் பொருட்களில், உணவுகளில் கொரோனா பரவும் என்பதும் முழுக்க முழுக்க பொய்யான செய்தியாகும். இதை நம்ப வேண்டாம். இதன் மூலம் வைரஸ் பரவும் என்றால் இந்தியாவில் பல கோடி பேர் இதனால் பாதிக்கப்பட்டு இருப்பார்கள். அதேபோல் காய்ச்சல் இருக்கும் எல்லோருக்கும் கொரோனா இருக்கும் என்று சந்தேகம் கொள்வதும் தவறானது ஆகும். அதிக சந்தேகம் இருந்தால் சோதனை செய்யலாம்.

வீட்டு விலங்குகள்

வீட்டு விலங்குகள்

உங்கள் வீட்டில் வளர்க்கும் விலங்குகள் மூலம் கொரோனா பரவும் என்பது தவறான தகவல். நாய்கள், பூனைகள் மூலம் கொரோனா பரவாது. அதேபோல் சிக்கன், மட்டன், மீன் போன்ற அசைவ உணவுகள் வழியே கொரோனா பரவும் என்பதும் முழுக்க பொய்யான தகவல் ஆகும். இதை நம்பி சைவத்திற்கு மாறி நாக்கின் சுவையை இழக்க வேண்டாம். அதேபோல் வெயிலில் நடந்தால் கொரோனா பரவாது என்பதும் பொய் ஆகும். வெயில் மூலம் கொரோனா வேகம் குறையும், ஆனால் சாகாது.

வருமா

வருமா

மேலும் நீர் மூலம் நதியில், கடலில் கொரோனா பரவும் என்பதும் முட்டாள்தனமாக பொய்யாகும். இதை நம்பி நதி நீரை மொத்தமாக அப்புறப்படுத்த சில நாட்டு அரசுகள் திட்டமிட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அது தவறு . அதேபோல் ஒருமுறை கொரோனா தாக்கினால் அவர்களை மீண்டும் கொரோனா தாக்காது என்பதும் பொய்யாகும். கொரோனா ஒரே நபரை இரண்டு முறை தாக்கிய சம்பவங்கள் ஏற்கனவே நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+