சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மற்ற மாநிலங்கள் திணறும் போது.. மீண்டு எழும் தமிழகம்.. இன்று 1725 பேருக்கு கொரோனா.. செம மாற்றம்!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் இன்று 1725 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்த கேஸ்களின் எண்ணிக்கை 7,59,916 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. டெல்லி, மேற்கு வங்கம், கேரளா போன்ற மாநிலங்களில் தினசரி கேஸ்கள் 5000க்கும் அதிகமாக வர தொடங்கி உள்ளது.

பிற மாநிலங்கள் பலவற்றில் இரண்டாம் அலை ஏற்பட்டு இருக்குமோ என்று அச்சம் ஏற்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் கேஸ்கள் குறைய தொடங்கி உள்ளது. இன்றும் 2000க்கும் குறைவாக தமிழகத்தில் கொரோனா கேஸ்கள் பதிவாகி உள்ளது.

இன்று

இன்று

தமிழகத்தில் இன்று 1725 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்த கேஸ்களின் எண்ணிக்கை 7,59,916 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 17 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர்.

எத்தனை

எத்தனை

தமிழகத்தில் இதுவரை 7,32,656 பேர் இதுவரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.11,495 பேர் இதுவரை தமிழகத்தில் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர். தமிழகத்தில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை 15,765 ஆக உள்ளது. சென்னையில் இன்று 497 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.

சென்னை

சென்னை

209167 பேருக்கு சென்னையில் இதுவரை கொரோனா ஏற்பட்டுள்ளது. இன்று கோவையில் 174 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தமாக 46587பேருக்கு அங்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இன்று செங்கல்பட்டில் 118 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தமாக 44419 பேருக்கு அங்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.

டெஸ்ட் எண்ணிக்கை

டெஸ்ட் எண்ணிக்கை

11136662 மாதிரிகள் இதுவரை தமிழகத்தில் சோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று 63772 மாதிரிகள் தமிழகத்தில் சோதனை செய்யப்பட்டுள்ளது. சோதனைகளை தமிழகம் துரிதப்படுத்தி உள்ளது. தமிழகத்தில் இன்று 62982பேருக்கு கொரோனா சோதனைகள் செய்யப்பட்டுள்ளது. 10854878 பேர் தமிழகத்தில் கொரோனா சோதனை செய்யப்பட்டு உள்ளனர்.

English summary
Coronavirus: Total number of cases rise to 7,59,916 in Tamilnadu,1725 recorded today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X