Omicron: 2 டோஸ் வேக்சின் போட்டுட்டீங்களா? உங்களுக்கு இந்த 8 அறிகுறிகள் இருந்தால்- உடனே டெஸ்ட் எடுங்க
சென்னை: இரண்டு டோஸ் கொரோனா வேக்சின் போட்டவர்களுக்கு ஒருவேளை ஓமிக்ரான் ஏற்பட்டால் என்ன மாதிரியான அறிகுறிகள் எல்லாம் ஏற்படும் என்ற விவரம் வெளியாகி உள்ளது.
உலகம் முழுக்க ஓமிக்ரான் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. பல நாடுகளில் ஓமிக்ரான் டெல்டாவை மிஞ்சி ஆதிக்கம் மிக்க வைரஸாக மாறியுள்ளது. இந்தியாவில் ஓமிக்ரான் கேஸ்கள் 1000ஐ நெருங்கி உள்ளது.
இந்தியாவில் இதுவரை 961 பேருக்கு ஓமிக்ரான் ஏற்பட்டுள்ளது. தினமும் ஓமிக்ரான் கேஸ்கள் 200க்கும் அதிகமாக இந்தியாவில் பதிவாக தொடங்கி உள்ளது.

ஓமிக்ரான்
இரண்டு டோஸ் எடுத்தவர்களுக்கும் ஓமிக்ரான் வேகமாக பரவிக்கொண்டு இருக்கிறது. ஆனால் இவர்களுக்கு மிக மிக லேசான கேஸ்கள்தான் பதிவாகிக்கொண்டு இருக்கிறது. பெரிய அளவில் அறிகுறிகள் தென்படுவது இல்லை. 2 டோஸ் போட்டதன் காரணமாக எதிர்ப்பு சக்தி இவர்களின் உடலில் அதிகம் இருக்கும். இதனால் இவர்களுக்கு சிறிய அளவிலான அறிகுறிகளே ஏற்படுகின்றன.

அறிகுறிகள்
இரண்டு டோஸ் வேக்சின் எடுக்காத நபர்களுக்கு உடலில் மூச்சு பிரச்சனை, வேகமாக இதயத்துடிப்பு போன்ற அறிகுறிகள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால் இரண்டு டோஸ் போட்டவர்களுக்கு மிக மிக லேசான அறிகுறிகள் மட்டுமே தென்படுகிறது என்று பல்வேறு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பிரபல நியூயார்க் மருத்துவர் டாக்டர் கிரெய்க் ஸ்பென்சர் இது தொடர்பாக விளக்கம் தெரிவித்துள்ளார்.

8 அறிகுறிகள்
அவரின் கூற்றுப்படி, பின் வரும் 8 அறிகுறிகள் 2 டோஸ் வேக்சின் எடுத்தவர்களுக்கு மிக மிக லேசாக தோன்றும் வாய்ப்புகள் உள்ளன. அதன்படி, இரண்டு டோஸ் போட்டவர்களுக்கு ஓமிக்ரான் ஏற்பட்டால் தலைவலி முக்கிய அறிகுறியாக ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. மேலும் தொடர் இருமல் ஓமிக்ரான் அறிகுறியாக ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது.

இருமல்
மூக்கில் சளித்தொல்லை அறிகுறி இரண்டு டோஸ் போட்டவர்களுக்கு ஓமிக்ரான் ஏற்பட்டால் ஏற்படும். உடல் அதிக சோர்வாக காணப்படும். இந்த 4 அறிகுறிகள் போக வறண்ட தொண்டை இன்னொரு முக்கிய அறிகுறியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு டோஸ் எடுத்தவர்களுக்கு ஓமிக்ரான் வந்தால் மிக மிக லேசான காய்ச்சல் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன.
Recommended Video

உடல் வலி
மேலும் உடலில் சதைகள் வலி ஏற்படும் மற்றும் மூட்டுகள் வலி ஏற்படும் என்றும் அந்த மருத்துவர் தெரிவித்துள்ளார். இந்த 8 அறிகுறிதான் இரண்டு டோஸ் எடுத்தவர்களுக்கு ஓமிக்ரான் வந்தால் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். இவை லேசான அறிகுறிகளாக இருக்கும். மாறாக தீவிரமாக இருக்காது என்று அந்த மருத்துவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications