சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சமூக பரவலான ஓமிக்ரான்.. தமிழ்நாட்டில் இன்று முதல் லாக்டவுனா? முதல்வர் ஸ்டாலின் இன்று அறிவிப்பு

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாட்டில் ஊரடங்கு குறித்தும், புதிய லாக்டவுன் கட்டுப்பாடுகள் குறித்தும் முதல்வர் ஸ்டாலின் இன்று முக்கிய அறிவிப்பை வெளியிட இருக்கிறார். ஓமிக்ரான் பரவல் காரணமாக தமிழ்நாட்டில் லாக்டவுன் கட்டுப்பாடுகள் விதிப்பது பற்றி முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை செய்து வருகிறார்.

Recommended Video

    புதுச்சேரியில் முதல் முறை.. இருவருக்கு ஓமைக்ரான்: சர்ச்சையாக மாறும் புத்தாண்டு கொண்டாட்டங்கள்!

    நாடு முழுக்க ஓமிக்ரான் கேஸ்கள் வேகமாக உயர்ந்து வருகிறது. பல மாநிலங்களில் ஓமிக்ரான் கேஸ்கள் சமூக பரவல் என்ற நிலையை எட்டிவிட்டது. அதாவது வெளிநாட்டு பயணிகள் மட்டுமின்றி லோக்கல் கேஸ்களிலும் ஓமிக்ரான் கண்டறியப்பட்டு வருகிறது.

    மகாராஷ்டிரா, டெல்லி ஆகிய மாநிலங்களில் ஓமிக்ரான் சமூக பரவல் மிக மோசமான அளவில் இருக்கிறது. இந்தியாவில் ஓமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை நேற்று வரை 961 ஆக இருந்தது.

    சென்னையில் மழை.. பணிகள் துரிதமாக நடக்கிறதா?. பேரிடர் கட்டுப்பாட்டு அறையில் முதல்வர் ஸ்டாலின் விசிட் சென்னையில் மழை.. பணிகள் துரிதமாக நடக்கிறதா?. பேரிடர் கட்டுப்பாட்டு அறையில் முதல்வர் ஸ்டாலின் விசிட்

    தமிழ்நாடு ஓமிக்ரான்

    தமிழ்நாடு ஓமிக்ரான்

    இன்று பாதிப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் ஓமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை எதிர்பார்க்காத அளவிற்கு அதிகரித்து வருகிறது. இதுவரை 45 ஓமிக்ரான் கேஸ்கள் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ளது.

    சந்தேக கேஸ்கள்

    சந்தேக கேஸ்கள்

    ஆனாலும் நிறைய சந்தேக கேஸ்கள் உள்ளன. அதேபோல் ஓமிக்ரான் சமூக பரவல் நிலையை எட்டிவிட்டதாக ஏற்கனவே சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்து இருந்தார். இதன் காரணமாக ஓமிக்ரான் கேஸ்கள் வரும் நாட்களில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கட்டுப்பாடுகள்

    கட்டுப்பாடுகள்

    தமிழ்நாட்டில் இந்த நிலையில் கட்டுப்பாடுகள் கொண்டு வருவது குறித்து முதல்வர் ஸ்டாலின் சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுடன் தற்போது ஆலோசனை செய்து வருகிறார்.ஆலோசனையில் தலைமை செயலாளர் வெ இறையன்பு கலந்து கொண்டுள்ளார். சுகாதாரத்துறை அதிகாரிகள், மருத்துவத்துறை வல்லுனர்கள் ஆலோசனையில் கலந்து கொண்டுள்ளனர். தமிழ்நாட்டில் அதிகபட்ச தளர்வுகளுடன் லாக்டவுன் நிலவி வருகிறது.

    தமிழ்நாடு லாக்டவுன்

    தமிழ்நாடு லாக்டவுன்

    கடந்த 15-ந் தேதி பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு இன்று முடிவடைகிறது. புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு மட்டும் ஆங்காங்கே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. கடற்கரைகள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மற்றபடி கோவில்களில் வழிபாடு நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    முதல்வர் ஸ்டாலின் லாக்டவுன்

    முதல்வர் ஸ்டாலின் லாக்டவுன்

    இந்த நிலையில்தான் இன்று ஊரடங்கு குறித்தும், புதிய லாக்டவுன் கட்டுப்பாடுகள் குறித்தும் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு நடத்த இருக்கிறார். இந்த ஆலோசனைக்கு பின் முதல்வர் ஸ்டாலின் லாக்டவுன் குறித்த முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    English summary
    Coronavirus; Will Tamilnadu get new lockdown restrictions? CM M K Stalin to announce today.'
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X