கொரோனா- அனைத்து ரேசன் கார்டுகளுக்கும் தலா ரூ15,000 வழங்க கோரி ஹைகோர்ட்டில் வழக்கு
சென்னை: கொரோனோ பாதிப்பு இருக்கும் வரை அனைத்து ரேசன் கார்டுகளுக்கும், மாதம் ரூ15,000 வழங்க உத்தரவிட கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கொரோனோ பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மத்திய, மாநில அரசு பல்வேறு பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் கொரோனோ பாதிப்பை குறைக்க மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் வருகின்ற 22 ம் தேதி மக்கள் ஊரடங்கையும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இதே போல் அலுவலகங்களிலும் வீடுகளிலேயே இருந்து வேலை செய்ய மாநில அரசு அறிவித்துள்ளது. இதனால் மக்கள் வெளியே செல்லாமல் வீடுகளிலேயே இருப்பதால் ஒவ்வொரு குடும்பங்களுக்கு வருமான இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
அண்டை மாநிலமான கேரளாவில் கொரானோ பாதிப்பில் இருந்து மாநிலத்தை முழுமையாக மீட்டெடுக்கும் நோக்குடன் ரூ20,000 கோடி சிறப்பு நிதி திட்டத்தை அறிவித்துள்ளது. அதே போல், கொரோனோ பாதிப்பு இருக்கும் வரை தமிழக அரசும் அனைத்து ரேஷன் காரர்களுக்கும் மாதம் ரூ15,000 வழங்க வேண்டும் என்றும் , கொரோனோ வைரஸில் இருந்து தற்காத்துக் கொள்ள தேவையான கிருமி நாசினி மற்றும் சோப் ஆகியவற்றை நேரடியாக வீடுகளுக்கு கொண்டு வந்து டோர் டெலிவரி செய்ய உத்தரவிட கோரியும் சென்னை சேத்துப்பட்டு சேர்ந்த வழக்கறிஞர் ரமேஷ் உமாபதி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவானது விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
-
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்'












Click it and Unblock the Notifications