"என்ஜிகே" படம் பாத்தீங்களா.. இப்ப சொல்லுங்க.. பிரஷாந்த் கிஷோர்கள் நல்லதா இல்லை கெட்டதா!

பிரபல நிறுவனங்களின் பிடியில் அரசியல் கட்சிகள் சிக்கி வருகின்றன

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    Prasanth kishor | பிரஷாந்த் கிஷோர் விவகாரத்தில் பரிதவிக்கும் அதிமுக,வேடிக்கை பார்க்கும் திமுக-வீடியோ

    சென்னை: மிக பெரிய ஆபத்தில் சிக்கி கொண்டுள்ளது இந்திய அரசியல் என்றுதான் சொல்ல வேண்டும்! சிந்தித்து, சுயமாக முடிவெடுத்து ஓட்டு போட்டு கொண்டிருந்த வாக்காளர்களின் மூளையை, பிரபல நிறுவனங்கள் மழுங்கடிக்க ஆரம்பித்துள்ளன என்பதுதான் அந்த அபாயம்.

    என்ஜிகே படம் பார்த்திருப்பீர்கள்.. அதில் வரும் நாயகியின் ரோலைத்தான் இன்றுள்ள பிரசாந்த் கிஷோர்கள் செய்து கொண்டுள்ளனர். இப்போது இந்த செய்தி எளிதாக உங்களுக்குப் புரியும்.

    5 வருடத்துக்கு முன்பு கூட நாட்டின் நிலைமை சுமாராகத்தான் இருந்தது. எப்போது 2014-ம் ஆண்டு தேர்தல் நடந்ததோ அப்போதுதான் "கார்ப்பரேட் கமர்ஷியல் அரசியல்" தலைதூக்க ஆரம்பித்துள்ளது.

    பிரதமர் மோடி

    பிரதமர் மோடி

    ஒரு மாநில முதல்வராக மட்டுமே இருந்த மோடி, தேர்தலில் ஜெயிக்கும் முன்னே நாடு முழுவதும் ஃபேமஸ் ஆனாரே எப்படி? குஜராத் கலவரம், ரயில் எரிப்பு உள்ளிட்ட எத்தனையோ கறைகளை சுமந்த ஒருவர் எப்படி முதல் தேர்தலிலேயே அபார வெற்றிபெற முடியும்?

    ஸ்டாலின்

    ஸ்டாலின்

    அதேபோல, இளைஞர் அணி செயலாளராக இருந்தபோதுகூட மக்களிடம் அவ்வளவாக நெருங்காத முக ஸ்டாலின் எப்படி, பிரச்சாரங்களில் ஜொலிக்க முடிந்தது? டீ குடிப்பது, கலர் கலர் சட்டை போடுவது, சைக்கிள் ஓட்டுவது, செல்பி எடுப்பது என வெகுஜன மக்களுடன் திடீரென வந்து கலந்தாரே எப்படி?

    அரசியல்

    அரசியல்

    இதை எல்லாம் செய்ததும், செய்து வருவதும் பிரபல கார்ப்பரேட் அரசியல் நிறுவனங்களின் பணியே.. அதில் முக்கியமானவர்தான் பிரஷாந்த் கிஷோர்! மோடியை நாடெங்கும் வெளிச்சம் போட்டு காட்டியதும், ஸ்டாலினை மக்களிடம் கொண்டு சேர்த்ததும், ஜெகன்மோகனை நாடு திரும்பி பார்க்க வைத்ததும், நிதிஷ்குமாரை தூக்கி சிம்மாசனத்தில் வைத்ததும் இவர்தான்! ஐபேக் நிறுவன ஆலோசகராக இருக்கிறார்.

    மாயை.. கவர்ச்சி!

    மாயை.. கவர்ச்சி!

    இவரது பிரதான வேலை என்ன தெரியுமா? முதலில் தேர்தலில் போட்டியிடும் கட்சி தலைவர்களின் நிஜ முகத்தை மக்களிடம் இருந்து மறைப்பதுதான். மாறாக, கவர்ச்சிகரமான ஒரு மாயையை இந்த தலைவர்களுக்கு ஏற்படுத்துவார்கள். மக்கள் முன்னிலையில், எப்படி நடந்து கொண்டால் சுண்டி இழுக்கப்படலாம் என்று ஐடியா தருவார்கள்.

    குறைகள், கறைகள்

    குறைகள், கறைகள்

    இதன்மூலம் அக்கட்சி தலைவரின் குறைகள், கறைகள், காணாமல் போக செய்துவிடுவார். மக்களும் சம்பந்தப்பட்டவர்களின் பழைய கதைகளை மறந்து புது மாயையில் விழுந்து விடுகிறார்கள். இப்படித்தான் சென்ற முறை, இந்த முறை தேர்தல்களும், இனி வரும் தேர்தல்களும் நடக்க உள்ளன. இப்படி ஒரு பிரஷாந்த் என்றில்லை.. இதுபோல பல பிரஷாந்த்களும் உருவாக ஆரம்பித்துவிட்டார்கள். செய்த சாதனைகளை சொல்லி ஓட்டு கேட்க திராணியற்றவர்கள் கையாளும் குறுக்கு வழியில் இதுவும் ஒன்றாக மாறி வருகிறது.

    அர்ப்பணிப்பு

    அர்ப்பணிப்பு

    ஒவ்வொரு கட்சியையும் ஜெயிக்க வைத்து காட்டுவேன் என்று சொல்லி இவர்கள் பிசினஸ் ஒப்பந்தம் செய்து கொள்கிறார்கள். அதாவது அரசியல், பிசினஸ் ஆகிறது. பிசினஸ் என்ற நிலை வந்துவிட்டாலே, அங்கு உண்மை, மனசாட்சி, நேர்மை, தியாகம், அர்ப்பணிப்புக்கு எல்லாம் இடமிருக்காது.

    மூளை மழுங்கல்

    மூளை மழுங்கல்

    மக்கள் முன்பு, போலித்தனங்கள் அசால்ட்டாக வந்துபோகும், பிரம்மாண்டங்கள் நம் கண்ணை உறுத்தும், மக்கள் மூளைகள் மழுங்கப்பட்டு விடும்! இது ஜனநாயகத்துக்கு ஆபத்தான ஒரு விஷயம். எதை கொண்டு, எப்படி, யாரால், எதன்மூலம் இவைகளை மக்கள் துடைத்தெறிய போகிறார்களோ தெரியவில்லை. உண்மையான தேர்தல் ஜனநாயக நடைமுறைகளுக்கும் இது பேராபத்து என்றுதான் சொல்ல வேண்டும். இதன் மூலம் தெரிய வரும் நீதி.. மக்கள் கண் முன்பு மின்னுவதெல்லாம் பொன்னல்ல!

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+