சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அண்ணா பல்கலை துணைவேந்தர் சூரப்பா காலத்தில் முறைகேடு நடந்தது உண்மை: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பா பதவிக்காலத்தில் சில முறைகேடுகள் நடந்துள்ளதாக தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

Google Oneindia Tamil News

அண்ணா பல்கலை துணைவேந்தர் சூரப்பா காலத்தில் முறைகேடு நடந்தது உண்மை: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பா பதவிக்காலத்தில் சில முறைகேடுகள் நடந்துள்ளதாக விசாரணை ஆணையம் கண்டறிந்துள்ளது என தமிழ்நாடுஅரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது

சூரப்பா ஊழல் புகார்.. கலையரசன் ஆணையத்திற்கு 10 நாட்கள் கூடுதல் அவகாசம்.. தமிழ்நாடு அரசு உத்தரவுசூரப்பா ஊழல் புகார்.. கலையரசன் ஆணையத்திற்கு 10 நாட்கள் கூடுதல் அவகாசம்.. தமிழ்நாடு அரசு உத்தரவு

கலையரசன் ஆணையம்

கலையரசன் ஆணையம்

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பா, முறைகேடுகளில் ஈடுபட்டதாக கூறி, அவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் குழுவை நியமித்து முந்தைய அரசு உத்தரவிட்டது.

உயர் நீதிமன்றத்தில் சூரப்பா வழக்கு

உயர் நீதிமன்றத்தில் சூரப்பா வழக்கு

இந்த ஆணையத்தின் விசாரணையை எதிர்த்து சூரப்பா தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், விசாரணை அறிக்கை அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்க தடை விதித்து கடந்த பிப்ரவரியில் உத்தரவிட்டிருந்தது.

சூரப்பா தொடர்ந்த வழக்கு

சூரப்பா தொடர்ந்த வழக்கு

இந்நிலையில் சூரப்பா தொடர்ந்த வழக்கு, நீதிபதி பார்த்திபன் முன் மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது, அப்போது, தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், "நீதிபதி கலையரசன் தலைமையிலான ஆணையம், விசாரணையை முடித்து அறிக்கையை சமர்ப்பித்து விட்டது. அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்" எனத் தெரிவித்தார்.

முறைகேடு நடந்தது உண்மை அரசு தகவல்

முறைகேடு நடந்தது உண்மை அரசு தகவல்

மேலும் விசாரணை ஏற்கனவே முடிக்கப்பட்டு விட்டதால் இந்த வழக்கு செல்லத்தக்கதல்ல என்றும் சூரப்பா பதவிக்காலத்தில் சில முறைகேடுகள் நடந்துள்ளதாக ஆணையம் கண்டறிந்துள்ளது எனவும் தெரிவித்தார்.

இதையடுத்து, விசாரணை ஆணையத்தின் அறிக்கை நகலையும், விரிவான பதில் மனுவையும் தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதி பார்த்திபன், சூரப்பா தாக்கல் செய்த வழக்கின் விசாரணையை டிசம்பர் 15 ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.

English summary
Corruption took place during the tenure of Anna University Vice Chancellor Surappa: Government reply to High Court
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X