IQ test: எத்தனை வட்டங்கள் இருக்குனு கண்டுபிடிங்க பார்க்கலாம்! நிறைய பேர் தப்பாதான் சொன்னாங்க!
சென்னை: ஆப்டிக்கல் இல்யூஷன் படத்தில் எத்தனை வட்டங்கள் இருக்கின்றன என்பதை கண்டுபிடிக்க முடியுமா? இதை மிகவும் புத்திசாலித்தனமாக யோசித்தால் மட்டுமே உங்களால் விடையளிக்க முடியும்!
இன்று செல்போனிலேயே இளைஞர்கள் மூழ்கி இருந்தாலும் பெரும்பாலானோர் மூளைக்கு வேலை கொடுக்கிறார்கள். இதற்காக விடுகதைகள், பசில்கள் உள்ளிட்டவைகளை விளையாடுகிறார்கள். மேலும் புதிர்களும் சுவாரஸ்யமாகவும் ஆர்வத்தை தூண்டும் வகையிலும் இருப்பதால் இளைஞர்கள் இதை விளையாட நேரம் ஒதுக்கி வருகிறார்கள்.

இதற்காக எவ்வளவு நேரம் ஆகிறது என்பதெல்லாம் தெரியாமல் பலர் இந்த ஆப்டிக்கல் இல்யூஷன் எனப்படும் கண்கட்டி வித்தையில் நேரத்தை செலவிடுகிறார்கள். இது போன்ற புதிர்கள் எக்ஸ் வலைதள பக்கத்தில் இருக்கின்றன.
இங்கு ஒரு புகைப்படம் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் மூன்று பெரிய வட்டங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றில் எத்தனை வட்டங்கள் இருக்கின்றன என்பதை நீங்கள் கண்டறிய வேண்டும். நன்றாக உற்று பாருங்கள், சுற்றி முற்றி பாருங்கள்! ஒரே ஆங்கிளிலேயே பார்வையை வைக்காதீர்கள்.
முதல் பார்வையில் பார்க்கும் போது இதற்கான பதிலை 3 என நீங்கள் நினைக்கலாம். 3 ஐ தவிர வேறு எதுவுமே இல்லையே என சொல்லக் கூடாது. வட்டம் எந்த வடிவில் இருந்தாலும் அதையும் நீங்கள் கணக்கில் கொள்ள வேண்டும். என்ன கண்டுபிடித்துவிட்டீர்களா?
வேண்டுமானால் விடையை சொல்கிறோம். 14 தான் விடை! கண்டுபிடித்துவிட்டீர்களா? என்னாது 14 ஆ! , இருப்பதே 3 வட்டம்தான் எப்படி 14 இருக்கும்? போங்கு ஆட்டம் ஆடாதீங்க என எங்களை பார்த்து நீங்கள் கேட்பது தெரிகிறது. இப்பவும் சொல்கிறேன். நன்றாக விடையை தேடி கண்டுபிடியுங்கள்.
சரி நாங்களே சொல்லிவிடுகிறோம். கேள்வி என்ன How many circles do you see? என்பதுதானே, இதில் o,i-ல் உள்ள புள்ளி, o, o, கேள்விக்குறியின் கீழே உள்ள புள்ளி! இவற்றையும் சேர்க்க வேண்டும். அது போல் படத்திற்கு கீழே Think about it!!! என உள்ளது. இதிலும் i-ல் உள்ள புள்ளி, ஆச்சரியக் குறியில் உள்ள 3 புள்ளிகள். இவை எல்லாவற்றையும் சேர்த்தால் 11+ 3 வட்டங்கள்= 14 வட்டங்கள். இதுதான் சரியான விடை சிலர் b,d, a என்ற எழுத்துகளில் உள்ளதை எல்லாம் வட்டம் என கணக்கில் கொள்வார்கள்! அவை வட்டமில்லை!

இது மூளைக்கு நல்ல வேலை கொடுக்கும் செயலாகவும், கண்களால் தேடுவதன் மூலம் கண்களுக்கு ஒரு வித பயிற்சியாகவும் இருக்கிறது எனலாம்! உங்கள் புத்திசாலித்தனத்தை கண்டுபிடிக்க எளிமையான முறையாகும். பொதுவாக நமக்கு தேடுவது என்றால் மிகவும் பிடிக்கும். அதிலும் குறிப்பிட்ட நேரத்திற்குள் தேட வேண்டும் என்றால் விறுவிறுப்பு அதிகமாக இருக்கும்.
இது போன்ற ஆப்டிக்கல் இல்யூஷன் படங்கள் உங்கள் மூளையை குழப்பி முழியை பிதுங்க வைக்கும். விடையை கண்டுபிடித்துவிட்டால் உங்களின் உற்சாகத்திற்கு அளவே இல்லாமல் போகும். நிறைய நண்பர்கள், உறவினர்களின் வாட்ஸ் ஆப் குரூப்புகளில் ஆப்டிக்கல் இல்யூஷன், பசில்கள் இல்லாமல் நாளே முடியாது. மூளையையும் கண்களையும் குழப்பும் ஒரு விதமான விளையாட்டே ஆப்டிக்கல் இல்யூஷன் ஆகும். இதை ஒரு கண்கட்டி வித்தை என்றே சொல்லலாம். மிகவும் கெட்டிக்காரத்தனமாக யோசித்தால் நிச்சயமாக கண்டுபிடித்துவிடலாம். தொடர்ந்து முயற்சித்தால் கண்டுபிடித்துவிடலாம்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications