அடேங்கப்பா! வேற லெவல் யோசனை தான்.. இது மாத்திரை அட்டை இல்லங்க! திருமண அழைப்பிதழ்.. வியந்த உறவினர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வித்தியாசமான முறையில் வடிவமைக்கப்பட்ட திருமண அழைப்பிதழ் இணையத்தில் வேகமாகப் பரவி வரும் நிலையில், இது அனைவரது கவனத்தையும் ஈர்த்து உள்ளது.

Recommended Video

    அம்மனாகவே மாறிய Annapoorani Amma! பாத பூஜை செய்த பக்தர்கள்

    திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர் என்பார்கள். அப்படி அந்த ஒரு நாளில் நடக்கும் கூத்தைச் சிறப்பாக நடத்துவதற்குள் அனைவருக்கும் திக்குமுக்காடிவிடும்.

    அதிலும் அனைவரும் வியக்கத்தக்க வகையில் திருமணத்தை நடத்த வேண்டும் என்பதக்காக வித்தியாசமான முறைகளில் திருமணங்கள் நடந்து வருகிறது.

    டிரெண்டிங்

    டிரெண்டிங்

    கோடிகளில் செலவழித்து ஊரே வியக்கும் அளவுக்குத் திருமணம் நடத்துவது ஒரு முறை என்றால், வித்தியாசமாகச் சிந்தித்து இணையத்தையே திரும்பிப் பார்க்க வைப்பது மற்றொரு முறை. அப்படியொரு சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது. திருவண்ணாமலையில் பணியாற்றும் உதவி பேராசிரியர் ஒருவர் தனது திருமணத்திற்கு அச்சிட்டுள்ள அழைப்பிதழ் தான் இப்போது இணையத்தில் டிரெண்டிங்கில் உள்ளது.

    திருமணம்

    திருமணம்

    திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தனியார் மருந்தியல் கல்லூரி ஒன்றில் உதவி பேராசிரியராக எழிலரசன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவரது தந்தை அதே பகுதியில் மருந்தகம் ஒன்றை நடத்தி வருகிறார். இவருக்கும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக வசந்தகுமாரி என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. வரும் செப். 5ஆம் தேதி நடைபெறும் திருமணத்திற்காக இவர்கள் அச்சிட்டுள்ள அழைப்பிதழ் தான் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

     மாத்திரை அட்டை போல

    மாத்திரை அட்டை போல

    v மருந்தியல் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரியும் எழிலரசன் தனது திருமண அழைப்பிதழையே வித்தியாசமாக மாத்திரை அட்டைப் போல வடிவமைத்துள்ளார். எப்படி மாத்திரை அட்டையில் பின்புறம் மருந்து பெயர், டோஸ் அளவு, காலாவதி தேதி உள்ளிட்ட முக்கிய தகவல்கள் இடம் பெற்று இருக்குமோ அப்படி இவர்களின் திருமணம் குறித்த தகவல்கள் அதில் இடம் பெற்று உள்ளது.

    தகவல்கள்

    தகவல்கள்

    மருந்தின் பெயர் இருக்க வேண்டிய இடத்தில் " எழில்வசந்தா-செப்-05" என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. மூலப் பொருட்கள் இருக்கும் இடத்தில் மணமக்களின் பெயரும், அவர்களது கல்வி விவரங்கள், வேலை குறித்த தகவல்கள் இடம் பெற்று இருக்கிறது. பக்கவாட்டில் காலாவதி தேதி இடம் பெறும் இடத்தில் அதேபோல நீல நிறத்தில் திருமணம் மற்றும் வரவேற்பு நாள் குறித்த தகவல்கள் இடம் பெற்று உள்ளன.

     இணையத்தில் டிரெண்டிங்

    இணையத்தில் டிரெண்டிங்

    மேலும், மாத்திரையின் தயாரிப்பு நிறுவனத்தின் தகவல்கள் இருக்கும் இடத்தில் மணமக்களின் பெற்றோர் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், அன்றைய தினம் தான் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது என்ற பொது அறிவு தகவலும் இடம் பெற்றுள்ளது. எல்லாவற்றையும்விட எச்சரிக்கை எனக் குறிப்பிட்டு நண்பர்கள், உறவினர்கள் தவறாமல் வர வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனர். இந்த வித்தியமான அழைப்பிதழ் இணையத்தையே ஒரு கலக்கு கலக்கி வருகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+