மீண்டும் புழல் சிறையில் தேவநாதன் யாதவ்.. நீதிமன்ற காவலை நீட்டித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு
சென்னை: நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத் தலைவர் தேவநாதன் யாதவின் நீதிமன்ற காவலை செப்டம்பர் 27 ஆம் தேதி வரை நீட்டித்து, சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மயிலாப்பூரில் செயல்பட்டு வந்த தி மயிலாப்பூர் இந்து பெர்மனெட் ஃபண்ட் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த 144 முதலீட்டாளர்களிடம் 24 கோடியே 50 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக அந்த நிதி நிறுவனத்தின் இயக்குநர் தேவநாதன் யாதவ் உள்பட 3 பேரை பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்தனர்.

இந்தநிலையில் தேவநாதன் உட்பட மூன்று பேரின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில் மூன்று பேரும் நீதிபதி மலர் வாலன்டினா முன்பு நேரில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதனையடுத்து, தேவநாதன் யாதவ் உட்பட மூன்று பேரின் நீதிமன்ற காவலை செப்டம்பர் 27ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார். இதனையடுத்து மூவரும் புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
சென்னை மயிலாப்பூரில் தி மயிலாப்பூர் இந்து சாசுவத நிதி நிறுவனத்தை இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக தலைவர் தேவநாதன் யாதவ் நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நிரந்தர வைப்புத்தொகை உறுப்பினர்களாக உள்ளனர். இந்த நிறுவனத்திற்கு சென்னையில் மட்டும் 5 கிளைகள் உள்ளன. இந்த நிதி நிறுவனத்தில் குறைந்தபட்ச நிரந்தர வைப்பு நிதியாக ரூ.1 லட்சம் முதல் எவ்வளவு வேண்டுமானாலும் செலுத்தலாம். செலுத்தும் பணத்திற்கு 8 முதல் 12 சதவீத வட்டி அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதை நம்பி தமிழ்நாடு முழுவதும் ரூ.1 லட்சம் முதல் ரூ.2 கோடி வரையிலும் ஏராளமானோர் முதலீடு செய்துள்ளனர். இந்நிலையில், முதலீடு செய்தவர்களுக்கு முதிர்வுத் தொகை மற்றும் வட்டிப் பணம் முறையாக வழங்கப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் தினமும் மயிலாப்பூர் பகுதியில் உள்ள நிதி நிறுவனத்திற்குச் சென்று பணத்தைக் கேட்டு முறையிட்டனர். மேலும், காவல் ஆணையர் அலுவலகம் மற்றும் பொருளாதார குற்றப்பிரிவிலும் புகார் அளித்தனர்.
இந்நிலையில், பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் முதலீட்டாளர்களிடமிருந்து ரூ.525 கோடி பெற்று ஏமாற்றியதாக தெரியவந்தது. இதனை அடுத்து, திருச்சியில் வைத்து இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக தலைவர் தேவநாதன் யாதவை கைது செய்தனர். மேலும், இதே மோசடி வழக்கு தொடர்பாக அந்நிறுவனத்தின் இயக்குனர்களான குணசீலன், மகிமைநாதன் ஆகியோரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
மயிலாப்பூர் நிதி நிறுவனத்தின் மீது ஏகப்பட்ட புகார்கள் வந்த நிலையில், தேவநாதன் பெயரில் உள்ள 5 வங்கிக் கணக்குகளை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடக்கினர். இதுவரை 27 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. இதில் நிதி நிறுவனத்தின் பெயரில் இருந்த 18 வங்கிக் கணக்குகள், தேவநாதனின் தொலைக்காட்சி நிறுவனத்தில் பணியாற்றும் செய்தியாளர் குணசீலனின் 2 வங்கிக் கணக்குகள், ஒளிப்பதிவாளர் மகிமைநாதனின் 2 வங்கிக் கணக்குகளையும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடக்கி உள்ளனர்.
தேவநாதன் யாதவ் செய்ய முறைகேடு விவகாரம் குறித்து விசாரணை நடத்தி வரும் போலீசார், பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களை அழைத்து புகார் கொடுக்க மயிலாப்பூரில் போலீசார் சார்பில் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி தொடர்பாக இதுவரை 4 ஆயிரத்திற்கும் அதிகமான புகார்கள் பெறப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன்












Click it and Unblock the Notifications