இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 16,020 பேருக்கு கொரோனா பாதிப்பு.. 229 பேர் பலி
சென்னை: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 16,020 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. மூன்றாம் அலை பாதிப்பு அக்டோபர் - டிசம்பர் இடையில் ஏற்படலாம் என்று கணிக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து கேஸ்கள் குறைந்து வருகிறது.
இதுவரை மூன்றாம் அலைக்கான அறிகுறிகள் இந்தியாவில் தெரியவில்லை. தற்போது பண்டிகை காலம் என்பதால் மக்கள் அதிக அளவில் வெளியே சென்று வருகிறார்கள். இது ஒருவேளை கொரோனா கேஸ்களை அதிகரிக்கும் வாய்ப்புகளும் உள்ளன.

கொரோனா
இந்தியாவில் இதுவரை 3,40,00,500 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். 2,00,872 பேர் இந்தியாவில் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். 3,33,35,301 பேர் இதுவரை இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். 229 பேர் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் மரணம். 4,51,220 பேர் இந்தியாவில் இதுவரை கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர்.

தமிழ்நாடு
தமிழ்நாட்டில் தொடர்ந்து ஒரே அளவில் கொரோனா கேஸ்கள் பதிவாகி வருகின்றன. 1200-1400 என்ற அளவிலேயே தினமும் கேஸ்கள் பதிவாகி வருகிறது. முழுமையாக கொரோனா கட்டுப்படுத்தப்படவில்லை என்றால் பெரிய அளவில் கேஸ்கள் குறைக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா காரணமாக 26,80,857 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு புதிதாக 1289 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 35,814 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு மொத்தமாக 26,29,201 பேர் இதுவரை குணமடைந்து உள்ளனர். அங்கு 15,842 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

மகாராஷ்டிரா
மகாராஷ்டிராவில் கொரோனா காரணமாக 65,81,677 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு புதிதாக 2069 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு 30,525 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். அங்கு இதுவரை 1,39,621 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு மொத்தமாக 64,07,936 பேர் இதுவரை குணமடைந்து உள்ளனர். அங்கு புதிதாக 43 பேர் பலியாகி உள்ளனர்.

கேரளா
கேரளாவில் கடந்த 10 நாட்களாக கொரோனா கேஸ்கள் வேகமாக குறைந்து வருகிறது. இது கேரளா கொரோனா பீக்கை கடந்துவிட்டது என்பதையே உணர்த்துகிறது. கேரளாவில் கொரோனா காரணமாக 48,09,619 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு புதிதாக 7,823 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு 96,710 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். அங்கு இதுவரை 26,448 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு மொத்தமாக 46,85,932 பேர் இதுவரை குணமடைந்து உள்ளனர். அங்கு புதிதாக 106 பேர் பலியாகி உள்ளனர்.

ஆந்திர பிரதேசம்
ஆந்திர பிரதேசத்தில் கொரோனா காரணமாக 20,58,065 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு புதிதாக 503 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு 6,932 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். அங்கு இதுவரை 14,268 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு மொத்தமாக 20,36,865 பேர் இதுவரை குணமடைந்து உள்ளனர். அங்கு புதிதாக 12 பேர் பலியாகி உள்ளனர்.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை












Click it and Unblock the Notifications