தமிழகத்தில் மேலும் 31 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு.. மொத்தம் 1204 ஆக உயர்வு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் மேலும் 31 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1204 பேர் ஆக உயர்ந்துள்ளது.

Recommended Video

    ஹாட்ஸ்பாட் பகுதிகள் என்பது என்ன ? தமிழகத்தில் எங்கு உள்ளது?

    தமிழகத்தில் நேற்று மாலை நிலவரப்படி 1173 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். தமிழகத்தில் நேற்று மாலை நிலவரப்படி கொரோனா பாதிப்பால் 12 பேர் உயிரிழந்திருந்தனர்.

    Covid 19: 31 new cases reported in last 24 hours at tamil nadu

    தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து மாலை 6மணி அளவில் செய்தியாளர்களை சந்தித்து மாநில சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் விளக்கம் அளித்தார். இன்றைய நிலவரம் குறித்து அவர் பேசுகையில், "தமிழகத்தில் வீட்டு கண்காணிப்பில் 28711 பேர் உள்ளனர்.

    தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 31 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1204 ஆக உயர்ந்துள்ளது. இன்றுடன் 81 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

    தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக திண்டுக்கல்லில் 9 பேருக்கும், சென்னையில் 5 பேருக்கும், தஞ்சையில் 4 பேருக்கும், தென் காசியில் 3 பேருக்கும், மதுரையில் 2 பேருக்கும், ராமநாதபுரம் 2 பேருக்கும், கடலூரில் ஒருவருக்கும், நாகப்பட்டினத்தில் 2 பேருக்கும், சேலத்தில் ஒருவருக்கும், சிவகங்கை மற்றும் கன்னியாகுமரியில் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் இதுவரை 19255 பேருக்கு சோதனை நடத்தப்பட்டுள்ளது. மருத்துவமனையில் பணியாற்றுபவர்கள் என்95 மாஸ்க் போட வேண்டும். வயதானவர்கள், உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் என் 95 மாஸ்க் அணிய வேண்டும். மற்றவர்கள் சாதாரண மாஸ்க் அணிந்தால் போதும்" என்றார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+