தமிழகத்தில் இன்று 610 பேருக்கு கொரோனா பாதிப்பு - 775 பேர் குணமடைந்தனர்

தமிழகத்தில் இன்று புதிதாக 610 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 775 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக 610 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8,30,183 ஆக அதிகரித்துள்ளது. 775 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்தம் 8,11,798 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இன்று கொரோனாவிற்கு 6 பேர் மரணமடைந்துள்ளனர் இதன்மூலம்
கொரோனாவிற்கு மரணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 12,257 பேராக அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 9,44,45,368 பேரை பாதித்துள்ளது. கடந்த ஓராண்டுக்கும் மேலாக உலகமே கொரோனாவின் பிடியில் சிக்கியுள்ளது. 20,20,596 பேர் கொரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் 6,74,81,422 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.

Covid 19: 610 people were diagnosed with corona infection today - 775 returned

இந்தியாவில் கொரோனாவிற்கு 1,05,51,529 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,01,86,881 பேர் குணமடைந்துள்ளனர். தினசரியும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறையத் தொடங்கியுள்ளது.

தமிழ்நாட்டில் இன்றைய தினம் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்தவர்கள், உயிரிழந்தவர்கள் பற்றி சுகாதாரத்துறை செய்தி வெளியிட்டுள்ளது.

வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் உட்பட 610 கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8,30,183 ஆக அதிகரித்துள்ளது. இன்று பாதிக்கப்பட்டவர்களில் 371பேர் ஆண்கள், 239 பேர் பெண்கள்.

இன்று 775 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8,11 798 ஆக அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கை 6,128 ஆக குறைந்துள்ளது.

இன்று மட்டும் மொத்தம் 6 பேர் உயிரிழந்துள்ளனர். 4 பேர் தனியார் மருத்துவமனையிலும், 2பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 12,257ஆக அதிகரித்துள்ளது.

இன்று ஒரே நாளில் 52,307 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் பரிசோதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு கோடியே 51லட்சத்து 77 ஆயிரத்து 94 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் 251 பரிசோதனை மையங்கள் உள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+