சூப்பர்.. தமிழகத்தில் தொடர்ந்து சரியும் கொரோனா கேஸ்கள்.. இந்த 3 மாவட்டங்களில் தினசரி பாதிப்பு சதம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் இன்று 1,657 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு மேலும் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் கடந்த 2 நாட்களாக கொரோனா தொற்று குறைந்து வருகிறது. தலைநகர் சென்னையிலும் கொரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வருவது ஆறுதலை ஏற்படுத்தி இருக்கிறது.

குறையும் கொரோனா

குறையும் கொரோனா

தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை அதிவேகமாக குறைந்து வந்தது. தமிழ்நாடு அரசு மேற்கொண்ட நடவடிக்கையும், கடுமையான ஊரடங்குமே கொரோனாவை குறைத்தது. அதன்பின்னர் இடையில் கொரோனா சற்று ஏற்றம், இறக்கமாக இருந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கிடையே மகிழ்ச்சி அளிக்கும் விதமாக கடந்த 2 நாட்களாக கொரோனா தொற்று குறைந்து வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,657 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பாதிப்பு நேற்றை விட குறைவாகும்.

உயிரிழப்பும் குறைவு

உயிரிழப்பும் குறைவு

இதனால் மொத்த பாதிப்பு 26,58,923 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு மேலும் 19 பேர் உயிரிழந்துள்ளனர். கோவையில் அதிகபட்சமாக கொரோனாவுக்கு 5 பேர் இறந்துள்ளனர். சென்னையில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இது தவிர தஞ்சாவூரில் 2 பேரும், தர்மபுரியில் 2 பேரும் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனாவுக்கு 35,509 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவில் இருந்து மேலும் 1,662 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 26,06,153 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பை விட குணமடைவோர் விகிதம் அதிகமாக இருக்கிறது.

சென்னையில் குறைவு

சென்னையில் குறைவு

17,261 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று மட்டும் 1,51,326 பேருக்கு சோதனை செய்யப்பட்டது. இதுவரை மொத்தம் 4,65,38,112 பேருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மேலும் 186 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா 200-க்கு கீழே குறைந்து ஆறுதல் அளிக்கிறது. ஆனால் கோவை தினசரி பாதிப்பில் தொடர்ந்து முதலிடம் பிடித்துள்ளது.

 கோவையில் அதிகம்

கோவையில் அதிகம்

கோவையில் 189 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 113 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் 37 பேருக்கும், மதுரையில் 27 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் 30 பேருக்கும், திருவள்ளூரில் 72 பேருக்கும், திருச்சியில் 60 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. திருப்பூரில் 84 பேருக்கும், விருதுநகரில் 14 பேருக்கும், ஈரோட்டில் 117 பேருக்கும், சேலத்தில் 64 பேருக்கும், நாமக்கல்லில் 50 பேருக்கும், தஞ்சாவூரில் 96 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

3 மாவட்டங்களில் சதம்

3 மாவட்டங்களில் சதம்

சென்னை, கோவை, ஈரோடு மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் தினசரி பாதிப்பு 100-ஐ கடந்துள்ளது. தஞ்சாவூர், செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கிறது. கோவையில் கொரோனா சற்று குறைந்தாலும் கட்டுக்குள் வர மறுக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+