மக்களுக்கு குட் நியூஸ்.. தமிழகத்தில் முடிவுக்கு வரும் கொரோனா தொற்று.. உயிரிழப்பு குறைவு!
சென்னை: தமிழ்நாட்டில் இன்று 841 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு மேலும் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வருகிறது. தினசரி பாதிப்பில் தலைநகர் சென்னை தொடர்ந்து முதலிடம் பிடித்து வருகிறது. கோவை உள்பட பல மாவட்டங்களில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது.

வேகமாக குறையும் கொரோனா
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வருகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு 1,500-க்குள் குறைந்த கொரோனா தற்போது 900-க்குள் குறைந்து விட்டது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 841 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பாதிப்பு நேற்றை விட குறைவாகும். இதனால் மொத்த பாதிப்பு 27,09,921 உயர்ந்துள்ளது.

உயிரிழப்பு
கொரோனாவுக்கு மேலும் 6 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில், கோவையில் தலா ஒருவர் இறந்துள்ளனர். இதுவரை கொரோனாவுக்கு 36,226 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவில் இருந்து மேலும் 937 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 26,63,323 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பை விட குணமடைவோர் விகிதம் தொடர்ந்து அதிகமாக இருக்கிறது.

சென்னை தொடர்ந்து டாப்
10,372 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று மட்டும் 1,00,563 பேருக்கு சோதனை செய்யப்பட்டது. இதுவரை மொத்தம் 5,11,07,339 பேருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மேலும் 126 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா தொடர்ந்து 150-க்கு கீழே குறைந்து ஆறுதல் அளிக்கிறது. ஆனால் தினசரி பாதிப்பில் தொடர்ந்து முதலிடம் பிடித்துள்ளது.

சென்னையில் சதம்
கோவையில் 94 பேருக்கு பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கோவையில் தொடர்ந்து கொரோனா அதிவேகமாக குறைந்து வருகிறது., செங்கல்பட்டில் 74 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் 21 பேருக்கும், மதுரையில் 11 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் 22 பேருக்கும், திருவள்ளூரில் 33 பேருக்கும், திருச்சியில் 32 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. திருப்பூரில் 60 பேருக்கும், ஈரோட்டில் 67 பேருக்கும், சேலத்தில் 50 பேருக்கும், நாமக்கல்லில் 38 பேருக்கும், தஞ்சாவூரில் 27 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் தினசரி பாதிப்பு தொடர்ந்து 100-ஐ கடந்து வருகிறது.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications