தமிழ்நாட்டில் கொரோனா அதிகரிப்பு.. சென்னை மீண்டும் முதலிடம்.. இந்த 4 மாவட்டங்களில் தொற்று அபாயம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் இன்று 1,964 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு மேலும் 28 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் சில நாட்களாக கொரோனா தொற்று குறைந்த நிலையில் இன்று மீண்டும் அதிகரித்துள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு மீண்டும் முதலிடத்தில் அமர்ந்து அதிர்ச்சியை எற்படுத்தி இருக்கிறது.

கொரோனா தாக்கம்

கொரோனா தாக்கம்

தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் இரண்டவது அலை அதிவேகமாக குறைந்து வந்தது. தமிழ்நாடு அரசு மேற்கொண்ட நடவடிக்கையும், கடுமையான ஊரடங்குமே கொரோனாவை குறைத்தது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று குறைந்த நிலையில் இன்று மீண்டும் அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,964 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உயிரிழப்பு அதிகம் எங்கே?

உயிரிழப்பு அதிகம் எங்கே?

இதனால் மொத்த பாதிப்பு 25,81,094 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு மேலும் 28 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் அதிகபட்சமாக கொரோனாவுக்கு 3 பேர் இறந்துள்ளனர். நாகப்பட்டினத்தில் அதிர்ச்சி அளிக்கும் விதமாக 3 பேர் உயிரிழந்துள்ளனர். திருச்சியிலும் 3 பேர் இறந்துள்ளனர். தஞ்சாவூர், கோவையில் தலா 2 பேர் இறந்துள்ளனர். இதுவரை கொரோனாவுக்கு 34,395 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவில் இருந்து மேலும்
1,917 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 25,26,317 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பை விட குணமடைவோர் விகிதம் குறைவாக இருக்கிறது.

சென்னை மீண்டும் முதலிடம்

சென்னை மீண்டும் முதலிடம்

20,382 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று மட்டும் 1,62,152 பேருக்கு சோதனை செய்யப்பட்டது. இதுவரை மொத்தம் 2,82,85,106 பேருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மேலும் 243 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கோவையை பின்னுக்கு தள்ளிவிட்டு சென்னை கொரோனா பாதிப்பில் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது. கோவை இரண்டாம் இடம் பிடித்துள்ளது.

ஈரோட்டில் அதிகம்

ஈரோட்டில் அதிகம்

கோவையில் 229 பேருக்கு பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 140 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் 39 பேருக்கும், மதுரையில் 17 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் 30 பேருக்கும், திருவள்ளூரில் 98 பேருக்கும், திருச்சியில் 78 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. திருப்பூரில் 73 பேருக்கும், விருதுநகரில் 10 பேருக்கும், ஈரோட்டில் 167 பேருக்கும், சேலத்தில் 85 பேருக்கும், நாமக்கல்லில் 37 பேருக்கும், தஞ்சாவூரில் 77 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

4 மாவட்டங்களில் சதம்

4 மாவட்டங்களில் சதம்

சென்னை, கோவை, செங்கல்பட்டு மற்றும் ஈரோடு ஆகிய 4 மாவட்டங்களில் தினசரி பாதிப்பு 100-ஐ கடந்துள்ளது. கொங்கு மண்டல பகுதிதிகளான கோவை, திருப்பூர், சேலம், ஈரோட்டில் பாதிப்பு அதிகமாக இருக்கிறது. குறிப்பாக ஈரோட்டில் தொற்று அதிவேகமாக அதிகரித்து வருகிறது. சென்னை புறநகர் பகுதிகளிலும் தொற்று அதிகமாக இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+