குட் நியூஸ்.. தமிழ்நாட்டில் 36-வது நாளாக குறைந்த கொரோனா தொற்று.. உயிரிழப்பும் குறைகிறது!
சென்னை: தமிழ்நாட்டில் இன்று 5,415 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு மேலும் 148 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் கொரோனா தினசரி பாதிப்பு 36-வது நாளாக குறைந்துள்ளது. சென்னையிலும் தொடர்ந்து குறைந்து வருகிறது.

5,415 பேருக்கு கொரோனா
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வருகிறது ஊரடங்கு தந்த பலன் காரணமாக கொரோனா 2-வது அலை 6,000-க்கு கீழ் வந்து விட்டது. இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 5,415 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உயிரிழப்பு குறைவு
இதனால் மொத்த பாதிப்பு 24,60,747 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு மேலும் 148 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் கொரோனாவுக்கு 9 பேர் இறந்துள்ளனர். அதிகபட்சமாக ஈரோட்டில் 13 பேர் இறந்துள்ளனர். இதுவரை கொரோனாவுக்கு 32,199 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவில் இருந்து மேலும் 7,661 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 23,83,624 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்

கோவை முதலிடம்
44,924 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று மட்டும் 1,68,409 பேருக்கு சோதனை செய்யப்பட்டது. இதுவரை மொத்தம் 3,13,55,230 பேருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மேலும் 314 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கோவையில் பாதிப்பு தொடர்ந்து முதலிடம் பிடித்து வருகிறது. கோவையில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது.

ஈரோடு நிலை என்ன?
கோவையில் மட்டும் 671 பேருக்கு பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 254 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் 78 பேருக்கும், மதுரையில் 92 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் 93 பேருக்கும், திருவள்ளூரில் 134 பேருக்கும், திருச்சியில் 198 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. திருப்பூரில் 337 பேருக்கும், விருதுநகரில் 67 பேருக்கும், ஈரோட்டில் 574 பேருக்கும், சேலத்தில் 369 பேருக்கும், நாமக்கல்லில் 214 பேருக்கும், தஞ்சாவூரில் 260 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
-
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications