தமிழகத்தில் ஒரே நாளில் 16 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு... ஆறுதல் அளித்த ரிப்போர்ட்.. முழு லிஸ்ட்
சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9227 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 16 மாவட்டங்களில் கொரோனா தொற்று பாதித்து உள்ளது. அதன் விவரத்தை பார்ப்போம்
தமிழகத்தில் கடந்த 8நாளைக்கு பின்னர் இன்றைக்கு தான் பாதிப்பு குறைந்துள்ளது. மாவட்டங்களில் கொரோனா பரவலும் குறைந்துள்ளது . சென்னையிலும் பாதிப்பு குறைந்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 380 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 5262 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் நேற்று 20 மாவட்டங்களில் கொரோனா பாதித்த நிலையில் இன்று 16 மாவட்டங்களில் கொரோனா தொற்று பாதித்துள்ளது. சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களில் குறைவான பாதிப்பே ஏற்பட்டுள்ளது.
இன்றைக்கு அரியலுரில் 4 பேருக்கும், செங்கல்பட்டில் 25 பேருக்கும், சென்னையில் 380 பேருக்கும், கடலூரில் 17 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 4 பேருக்கும், கரூரில் 2 பேருக்கும், மதுரை மற்றும நாகப்பட்டினத்தில் 2 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் இன்று பெரம்பலூரில் ஒருவருக்கும், தஞ்சாவூரில் ஒருவருக்கும், தேனியில் 5 பேருக்கும், திருவள்ளூரில் 25 பேருக்கும், திருவண்ணாமலையில் 23 பேருக்கும், தூத்துக்குடியில் ஒருவருக்கும், திருநெல்வேலியில் 5 பேருக்கும் விழுப்புரத்தில் 7 பேருக்கும், வெளிநாடுகளில் இருந்து விமான நிலைய குவாரண்டைனில் உள்ள 5 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 9227 பேருக்கு கொரோனா தொற்று மே 13ம் தேதி நிலவரப்படி உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரானா தொற்று என்பதை இப்போது பார்ப்போம்.
- அரியலூர் 348
- செங்கல்பட்டு 416
- சென்னை 5262
- கோவை 146
- கடலூர் 413
- தர்மபுரி 5
- திண்டுக்கல் 111
- ஈரோடு 70
- கள்ளக்குறிச்சி 61
- காஞ்சிபுரம் 160
- கன்னியாகுமரி 26
- கரூர் 54
- கிருஷ்ணகிரி 20
- மதுரை 123
- நாகப்பட்டினம் 47
- நாமக்கல் 77
- நீலகிரி 14
- பெரம்பலூர் 133
- புதுக்கோட்டை 6
- ராமநாதபுரம் 30
- ராணிப்பேட்டை 76
- சேலம் 35
- சிவகங்கை 12
- தென்காசி 53
- தஞ்சாவூர் 70
- தேனி 71
- திருப்பத்தூர் 28
- திருவள்ளூர் 492
- திருவண்ணாமலை 128
- திருவாரூர் 32
- தூத்துக்குடி 36
- திருநெல்வேலி 98
- திருப்பூர் 114
- திருச்சி 67
- வேலூர் 34
- விழுப்புரம் 306
- விருதுநகர் 44
- விமான நிலையத்தில் குவாரண்டைன் மொத்தம் 9 பேர்
கொரோனா.. எந்த மாவட்டத்தில் எவ்வளவு பாதிப்பு?#TamilNadu #CoronaUpdates pic.twitter.com/p6aLnLibil
— Oneindia Tamil (@thatsTamil) May 13, 2020












Click it and Unblock the Notifications