கொரோனா - 37 மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் நாளை அவரச ஆலோசனை - முக்கிய அறிவிப்பு வெளியாகும்
சென்னை செங்கல்பட்டு மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நாளை மாவட்ட ஆட்சியர்களுடன் அவசர ஆலோசனை நடத்துகிறார். காணொளி காட்சி மூலம் இ
சென்னை: கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நாளை மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். கொரோனா பாதிப்பு மாநிலம் முழுவதும் அதிகரித்து வருகிறது. கொரோனாவின் கோரத்தாண்டவத்தை கட்டுப்படுத்தவும், தடுப்பு நடவடிக்கையை மேலும் தீவிரப்படுத்துவது குறித்தும், மேலும் பல மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்துவது குறித்தும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளளது.
காணொளி காட்சி வாயிலாக இந்த அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. நாளை நடைபெறும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனான முதல்வரின் அவசர ஆலோசனை கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 440,450 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரு நாளில் 13,540 பேருக்கு தொற்று புதிதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 312 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 2710 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 62,087ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் சென்னையில் 1487 பேர் பாதிக்கப்பட்டள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் இன்று 37 பேர் பலியாகியுள்ளனர். தினசரியும் 2500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வட மாவட்டங்களில் மட்டுமல்லாது தென் மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால் மருத்துவமனைகளில் படுக்கைகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. தனிமைப் படுத்தும் முகாம்களும் அதிகரிக்கப்பட்டு வருகின்றன.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. மதுரையிலும் இன்று முதல் 30ஆம் தேதி வரை பொது முடக்கம் அமல்படுத்தப்பட உள்ளது. இதனிடையே மேலும் பல மாவட்டங்களில் பொது முடக்கத்தை அமல்படுத்துவது பற்றியும் கொரோனாவை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் ஆலோசிக்க உள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர்கள் தெரிவிக்கும் யோசனைகளைக் கேட்டு அதன் பின்னர் முக்கிய அறிவிப்புகளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்க வாய்ப்பு உள்ளது.
Recommended Video
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications