ஒரு பக்கம் AY.4.2 வகை கொரோனா.. இன்னொரு பக்கம் தீபாவளி ஷாப்பிங்.. 3ம் அலை ஆபத்தில் இந்தியா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: AY.4.2 வகை கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் இந்தியாவில் மக்கள் கூட்டம் கூட்டமாக ஷாப்பிங் செல்வது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா கேஸ்கள் உயரும் அபாயத்தை இது ஏற்படுத்தி இருக்கிறது.

உலகம் முழுக்க கொரோனா கேஸ்கள் வேகமாக உயர தொடங்கி உள்ளது. பல்வேறு நாடுகளில் தினசரி கேஸ்கள் உச்சம் தொட்டுள்ளது. அமெரிக்காவில் மீண்டும் தினசரி கேஸ்கள் 50 ஆயிரத்தை தாண்டி உள்ளது. யுகே, ரஷ்யா போன்ற நாடுகளில் தினசரி கேஸ்கள் 40 ஆயிரத்தை தாண்டி உள்ளது.

சீனாவிலும் தினசரி கேஸ்கள் 100க்கும் அதிகமாக பதிவாக தொடங்கி உள்ளது. முக்கியமாக AY.4.2 வகை கொரோனா கேஸ்கள் உலகின் பல்வேறு நாடுகளில் பரவ தொடங்கி உள்ளது.

வேகம்

வேகம்

இந்த புதிய வகை வைரஸ் வேகமாக பரவுவதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. உலகம் முழுக்க இதுவரை 26 ஆயிரம் பேர் AY.4.2 வகை கொரோனா மூலம் பாதிக்கப்பட்டு இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டெல்டா வைரஸ் போலவே இதுவும் வேகமாக பரவுவதாக உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆனால் இது எந்த அளவிற்கு ஆபத்தானது, இதன் மரண சதவிகிதம் எவ்வளவு என்பது குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. இது தொடர்பான தொடர் ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.

இந்தியாவிலும் பரவல்

இந்தியாவிலும் பரவல்

இந்தியாவிலும் AY.4.2 வகை கொரோனா கேஸ்கள் பதிவாகி உள்ளது. ஆந்திர பிரதேசத்தில் 10 கேஸ்களும், கர்நாடகாவில் 14 கேஸ்களும், கேரளாவில் 4 கேஸ்களும் என்று இந்தியாவில் 7 மாநிலங்களில் AY.4.2 வகை கொரோனா கேஸ்கள் பதிவாகி உள்ளது. வெகு சில நாட்களில் யுகே, அமெரிக்கா, ரஷ்யா, இந்தியா, ஜப்பான் என்று பல நாடுகளில் AY.4.2 வகை கொரோனா கேஸ்கள் பதிவாகி உள்ளதால்.. AY.4.2 வகை கொரோனா மிகவும் ஆபத்தானதாக கருதப்படுகிறது.

தீபாவளி ஷாப்பிங்

தீபாவளி ஷாப்பிங்

இப்படிப்பட்ட நேரத்தில்தான் இந்தியாவில் மக்கள் கூட்டம் கூட்டமாக தீபாவளி ஷாப்பிங் செல்ல தொடங்கி உள்ளனர். மக்கள் கூட்டம் கூட்டமாக ஜவுளி கடைகளுக்கும், நகை கடைகளுக்கும் படை எடுக்க தொடங்கி உள்ளனர். தீபாவளி பண்டிகை இந்தியாவில் கொண்டாடப்படும் மிக முக்கியமான பண்டிகை. ஆனாலும் மக்கள் கொரோனா என்ற ஒன்று இருப்பதை மறந்துவிட்டு, சமூக இடைவெளி விடாமல் கடைகளில் கூட்டம் கூட்டமாக கூட தொடங்கி உள்ளனர்.

Recommended Video

    திடீரென அதிகரிக்கும் Coronavirus பாதிப்புகள்.. உலக நாடுகளை அச்சுறுத்தும் AY.4.2 Variant
     இப்படி நேரத்தில் கூட்டமா?

    இப்படி நேரத்தில் கூட்டமா?

    அதிலும் AY.4.2 வகை கொரோனா பரவும் நேரம் பார்த்து மக்கள் இப்படி வெளியே அதிக அளவில் செல்வது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. பலர் பொது இடங்களில் சமுக இடைவெளி விடாமல் அலட்சியம் காட்டி வருகிறார்கள். அதேபோல் பலர் மாஸ்க் போடாமல் அலட்சியம் காட்டி வருகிறார்கள். பொதுவாக இந்தியாவில் பெரு நகரங்களில்தான் கேஸ்கள் அதிகமாக பதிவாகும்.

    அலட்சியம்

    அலட்சியம்

    பெருநகரங்களில்தான் புதிய அலைகள் பொதுவாக தோன்றும். இப்போது தீபாவளி ஷாப்பிங் என்ற பெயரில் மக்கள் பெரு நகரங்களில் கூட தொடங்கி உள்ளனர். இதனால் மூன்றாவது அலையை இந்த கூட்டம் ஏற்படுத்துமா என்ற அச்சம் எழுந்துள்ளது. AY.4.2 வகை கொரோனா ஏற்கனவே கொரோனா பாதித்தவர்களையும் பாதிக்கும் வாய்ப்பு உள்ளது.

    வேக்சின்

    வேக்சின்

    புதிய வகை கொரோனா எப்போதுமே ஏற்கனவே பாதித்தவர்களையும் பாதிக்கும் திறன் கொண்டதாக இருக்கும். அதேபோல் வேக்சின் போட்டவர்களுக்கு AY.4.2 வகை கொரோனா ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றன. இதனால் தீபாவளி கூட்டம், AY.4.2 வகை கொரோனா எல்லாம் சேர்த்து இந்தியாவில் 3ம் அலை பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளதோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+