அலட்சியம் வேண்டாம்.. 14 மாவட்டங்களில் தொற்று அதிகரிக்கிறது.. மாவட்ட நிலவரம் பாருங்கள்!
சென்னை: தமிழகத்தில் கொரோனா போய்விட்டதாக அலட்சியம் வேண்டாம். மீண்டும் தொற்று பாதிப்பு 14 மாவட்டங்களில் அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னை, கோவை, செங்கல்பட்டு, கடலூர், சேலம், திருவள்ளூர், தஞ்சை, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் தொற்று அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் நேற்று 46,294 பேர் கொரோனா நோயாளிகளாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதைவிட குறைவாக 46,255 பேர் நோய் பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இன்று மட்டும் 5,596 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் செப்டம்பர் 28ம் தேதி மாலை நிலவரப்படி எந்த மாவட்டத்தில் உயிரிழப்பு அதிகம், எந்த மாவட்டத்தில் நோயாளிகள், அங்கு இன்றைக்கு தொற்று பாதிப்பு அதிகமாக இருந்தது என்ற விவரங்களை இப்போது பார்ப்போம்.

தமிழகத்தில் நோயாளிகள்
தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 12311
பேர் ஆக்டிவ் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதற்கு அடுத்தபடியாக கோவையில் 4718 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சேலத்தில் 2641 பேரும், செங்கல்பட்டில் 2498 பேரும், திருப்பூரில் 1490 பேரும், திருவள்ளூரில் 1684
பேரும், கடலூரில் 1420 பேரும், தஞ்சாவூரில் 1660 பேரும், ஈரோட்டில் 1132 பேரும் ஆக்டிவ் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

மாவட்ட நிலவரம்
தமிழகத்தில் அக்டோபர் 3ம் தேதி நிலவரப்படி மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு விவரத்தை இப்போது பார்ப்போம். தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் இன்று 1364 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கோவையில் 486 பேரும், செங்கல்பட்டில் 395 பேரும், சேலத்தில் 351 பேரும், திருவள்ளூரில் 290 பேரும், திருப்பூரில் 167 பேரும், கடலூரில் 145 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தஞ்சையில் 244 பேர்
திருவண்ணாமலையில் 69 பேரும், வேலூரில் 135 பேரும், திருவாரூரில் 143 பேரும், திருச்சியில் 85 பேரும், திருநெல்வேலியில் 76 பேரும், விழுப்புரத்தில் 73 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். நாமக்கல்லில் 150 பேரும், தஞ்சாவூரில் 244 பேரும், புதுக்கோட்டையில் 65 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நீலகிரியில் 146 பேர்
கள்ளக்குறிச்சியில் 35 பேரும், காஞ்சிபுரத்தில் 150 பேரும், கன்னியாகுமரியில் 93 பேரும் ராணிப்பேட்டையில் 53 பேரும், தேனியில் 66 பேரும், நீலகிரியில் 146 பேரும், திருப்பத்தூரில் 89 பேரும் தொற்றால் இன்று பாதிக்கப்பட்டுள்ளனர். சிவகங்கையில் 37 பேரும், அரியலூரில் 38 பேரும், தென்காசியில் 30 பேரும், நாகப்பட்டினத்தில் 46 பேரும், மதுரையில் 85 பேரும், கரூரில் 40 பேரும், கிருஷ்ணகிரியில் 75 பேரும் , பெரம்பலூரில் 11 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
-
Joseph Vijay: கோட்டையில் முதல்வர் விஜய்யின் daily routine இதுதான்! சிலாகிக்கும் அமைச்சர்கள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
டமால் டுமீல் தான்.. 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது கனமழை! மார்க் செய்த வானிலை ஆய்வு மையம்! -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
Chennai Rain: இன்றும் இடி, மின்னலோடு கொட்டப் போகுது! சென்னையில் இருந்து குமரி வரைக்கும் மழை வெளுக்கும்! வானிலை அலர்ட் -
Seeman: யூடியூபர் மாரிதாஸ் கைது! தவெக அரசின் அதிகார திமிரின் உச்சம்! சீமான் கொந்தளிப்பு -
Real Estate: தமிழகத்தில் கட்டுமான பொருட்களின் விலை கிடுகிடு உயர்வு! வீடு கட்டுவோர் கவலை! -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
அடித்து பெய்யப்போகும் கனமழை! கோவை டூ கன்னியாகுமரி.. 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்?












Click it and Unblock the Notifications