சீனாவில் கொரோனா அதிகரித்துள்ளதே.. தமிழக பிளான் என்ன.. மா.சுப்பிரமணியன் விளக்கம்
சென்னை: சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்வது குறித்து மத்திய அரசின் அறிவுறுத்தல்களை பின்பற்றுவோம் என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
திமுக இளைஞர் அணி செயலாளரும் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏவுமான உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது.
தமிழகம் முழுவதும் திமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் உதய நிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் வாழ்த்து தெரிவித்தனர்.

மா.சுப்பிரமணியன் பேட்டி
பல்வேறு இடங்களில் திமுகவினர் சார்பில் நலத்திட்ட உதவிகளும் நடைபெற்றன. சென்னை சைதாப்பேட்டை தொகுதியில் மெகா மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த மருத்துவ முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த மா.சுப்பிரமணியன் கூறியதாவது:- உதய நிதி ஸ்டாலின் அமைச்சர் ஆவதற்கான அனைத்து தகுதிகளும் உள்ளது.

உதயநிதி அமைச்சர் ஆனால்..
உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் ஆனால் மகிழ்ச்சி அடைவோம். இந்தியாவில் விமான நிலையங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. சீனாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தொற்று ஏற்பட்டு உள்ளது. பல மாவட்டங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சீனாவில் ஊரடங்குக்கு எதிராக போராட்டமும் நடைபெற்று வருகிறது. இதுபோன்ற ஒரு நிலை மற்ற நாட்டுகளில் இல்லை.

முக கவசம் அணிவது பாதுகாப்பானது
பல நாடுகளும் முக கவசம் அணிவதில் இருந்து விலக்கு அளித்துள்ளன. கொரோனா பரிசோதனை, பாதிப்புகளை பதிவு செய்வது நிறுத்தப்பட்டு இருக்கிறது. இந்தியாவை பொருத்தவரை கொரோனா பாதிப்பு குறைவாகவே இருக்கிறது. தமிழகத்தில் நேற்று 27 பேருக்கு மட்டுமே தொற்று உறுதி செய்யப்பட்டது. சீனாவில் கொரோனா பாதிப்பு உயர்ந்தாலும் பிற நாடுகளில் பாதிப்பு பூஜ்ஜியம் என்ற நிலையை நோக்கி செல்கிறது. இருந்தாலும் முகக்கவசம் அணிவது பாதுகாப்பானது.

ஆர்டிபிசிஆர் பரிசோதனை தேவையில்லை
இதனிடையே, மா.சுப்பிரமணியன் அளித்த பேட்டியில் மேலும் கூறியதாவது:- சீனாவில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்வது பற்றி மத்திய அரசின் அறிவுறுத்தல்களை பின்பற்றுவோம். விமான நிலையங்களில் ஆர்டிபிசிஆர் பரிசோதனை தேவையில்லை என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் அவலங்கள் நடப்பதாக கூறும் குற்றச்சாட்டுக்கள் ஏற்புடையது அல்ல. அரசு மருத்துவமனைகளில் ஒருநாளை 10 ஆயிரம் அறுவை சிகிசைகள் நடைபெறுகின்றன. நீட் விலக்கு மசோதாவிற்கு ஜனாதிபதி ஒப்புதல் தருவார் என்று காத்திருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications