அப்படியே சரிந்து விழுந்த டி ராஜா.. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் அதிர்ச்சி.. சென்னையில் பரபரப்பு
சென்னை: சென்னையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளரான டி ராஜா திடீரென மயங்கி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர் உடனடியாக மீட்கப்பட்டு சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மே மாதம் 3ம் தேதி குக்கி-மைத்தேயி இன மக்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இது வன்முறையாக மாறிய தொடர்ந்து வருகிறது. இரண்டரை மாதங்கள் கடந்தும் கூட இந்த வன்முறை தொடர்ந்து வருகிறது.

மணிப்பூரை பொறுத்தமட்டில் குக்கி இன மக்கள் பழங்குடியினர் பட்டியலில் உள்ளனர். இதற்கிடையே தான் தங்களையும் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மைத்தேயி மக்கள் கூறி வருகின்றனர். இதற்கு குக்கி மக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் ஏற்பட்ட மோதல் தான் வன்முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளது.
மணிப்பூர் வன்முறையின் ஒருபகுதியா கடந்த மே மாதம் 4ம் தேதி ஒரு கும்பல் 2 குக்கி பழங்குடியின பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து சென்ற வீடியோ சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதற்கிடையே தான் மணிப்பூர் வன்முறையை கட்டுப்படுத்த தவறியதாக அம்மாநில பாஜக அரசு மற்றும் மத்திய பாஜக அரசை எதிர்க்கட்சி தலைவர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

மேலும் மணிப்பூர் வன்முறை மற்றும் பெண்களுக்கு எதிரான கொடுமைகளை கண்டித்தும், நீதி கேட்டும் நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளன. தமிழ்நாட்டில் திமுக, விடுதலை சிறுத்தைகள் உள்பட பல கட்சிகள் ஆர்ப்பாட்டத்தை நடத்தி உள்ளன. இந்நிலையில் தான் இன்று சென்னையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மணிப்பூர் வன்முறைக்கு நீதி கேட்டு இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி ராஜா பங்கேற்றார். அப்போது அவர் மணிப்பூர் மாநில அரசு மற்றும் மத்திய பாஜக அரசை குற்றம்சாட்டி பேசினார். ஆர்ப்பாட்டம் முடிந்த பிறகு டி ராஜா பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது திடீரென்று அவர் மயங்கி கீழே விழுந்தார்.
இதையடுத்து கட்சியினர் அவரை மீட்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே டி ராஜா மயங்கி விழுந்த நிலையில் அவரை மீட்டு கட்சியினர் காரில் ஏற்றும் வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி பரவி வருகிறது.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications