அதானியிடம் தமிழ்நாடு மின்சார வாரியம் லஞ்சமா? விசாரணை நடத்துங்க..ஒப்பந்தத்தை ரத்து செய்யுங்க..சிபிஎம்
சென்னை: அதானியிடம் தமிழ்நாடு மின்சார வாரிய அதிகாரிகள் லஞ்சம் வாங்கியதாக அமெரிக்கா நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது தொடர்பாக தமிழ்நாடு அரசு விசாரணை நடத்த வேண்டும்; இது தொடர்பான மின்சார வாரியத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசுக்கு சிபிஎம் கட்சியின் தமிழக மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக சிபிஎம் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை: மோடி தலைமையிலான பாஜக அரசின் ஆதரவோடும் ஒத்துழைப்போடும் தொடர்ச்சியாக பல்வேறு முறைகேட்டில் ஈடுபட்டு வரும் அதானி நிறுவனம் தற்போது மீண்டும் ஒரு பெரும் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது அம்பலமாகியுள்ளது. அதானி நிறுவனத்தின் மீது பகிரங்கமான குற்றச்சாட்டை முன்வைத்த அமெரிக்க நீதிமன்றம் அவருக்கு எதிரான கைது வாரண்டையும் பிறப்பித்துள்ளது.

இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம்: அமெரிக்காவின் பாதுகாப்பு, அயலுறவு மற்றும் ஊழல் தடுப்புச் சட்டங்களை மீறி, முதலீட்டாளர்களை ஏமாற்றி ரூ. 6,300 கோடி அளவிற்கு மோசடி செய்ததோடு இந்திய அதிகாரிகளுக்கு ரூ. 2,029 கோடி அளவிற்கு லஞ்சம் கொடுத்த குற்றச்சாட்டில் அதானி நிறுவனம் கையும் களவுமாக பிடிபட்டுள்ளதாக ஆதாரங்களோடு அமெரிக்க நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அதிர்வலைகள்: சூரிய ஒளி மின்சார விநியோக ஒப்பந்தங்களை அடுத்த 20 ஆண்டுகளுக்கு பெறுவதற்காகவும், அதன் மூலமாக கிடைக்கவுள்ளள ரூ.16,800 கோடி லாபத்திற்காக அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தது, சட்டங்களை மீறி முறைகேடாக மூலதனத்தை திரட்டியது உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளில் அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி, அவரது மருமகன் சாகர் அதானி உள்ளிட்ட பலர் இத்தகைய முறைகேடுகளில் ஈடுபட்டுள்ள செய்தி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அதானி குழுமம்: சூரிய ஒளி மின்சாரம் வாங்குவதற்கு அதானி குழுமத்தால் தமிழ்நாடு உட்பட பல மாநிலங்கள் ஒப்பந்தங்களை ஏற்படுத்தியுள்ளன. மோடி அரசின் நிர்ப்பந்தத்தினால் அதானி நிறுவனங்களில் முதலீடு செய்திருந்த எல்.ஐ.சி நிறுவனம் ரூ.12,000 கோடியை இழக்க நேரிட்டுள்ளது. இதேபோல், எஸ்.பி.ஐ., பேங்க் ஆப் இந்தியா உள்பட பல வங்கிகளும் பெரும் இழப்பை சந்தித்துள்ளன. அதானி மீதான இத்தகைய குற்றச்சாட்டை தொடர்ந்து பல்வேறு நாடுகளும் அதானி நிறுவனத்துடனான தனது வர்த்தக ஒப்பந்தங்களை திரும்பப் பெற்றுள்ளன.
எத்தனை எத்தனை புகார்கள்: ஏற்கனவே SEBI விதிகளை ஏமாற்றியது, ஏராளமான நிழல் நிறுவன முதலீடுகள் மூலம் பங்குச்சந்தையில் தனது மதிப்பை செயற்கையாக அதிகரித்துக் கொண்டது, மாநில மின்வாரியங்களுக்கு தரமற்ற நிலக்கரியை வழங்கி அரசுக்கு பல்லாயிரம் கோடி நட்டத்தை உருவாக்கியது என பல்வேறு சட்ட விரோத முறைகேடுகளில் ஈடுபட்டுள்ள அதானி, தற்போது மீண்டும் பெரும் ஊழல் - லஞ்சப் புகாரில் சிக்கியுள்ளார்.
உடனே கைது செய்யுங்கள்: இந்நிலையில், வழக்கம் போல அவர் தப்பிவிடாமல் சட்ட ரீதியான உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டு அவரை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதையும், அதானி நிறுவன ஊழலுக்கு துணை நின்ற அரசு அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் என அனைவரையும் கைது செய்திடவும், இவ்வழக்கினை சிபிஐ விசாரணைக்கு உட்படுத்தப்படுத்தி வெளிப்படையான புலன் விசாரணை மேற்கொள்வதையும் ஒன்றிய அரசு உறுதி செய்திட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.
முழு விசாரணை தேவை: அதானி குழுமத்தால் லஞ்சம் வழங்கப்பட்ட நிறுவனங்களில் தமிழ்நாடு மின்வாரியத்தின் பெயரும் இடம்பெற்றுள்ளதால் இது தொடர்பான முழு விசாரணைக்கு உத்தரவிட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், உண்மை விபரங்களை பொதுமக்களுக்கு தெரியப்படுத்திட வேண்டுமெனவும், கூடுதலான கட்டணத்தில் அதானி நிறுவனத்துடன் மின்சார கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது. மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வலுவான கண்டன இயக்கங்களை முன்னெடுக்க கட்சி அணிகளையும், ஜனநாயக சக்திகளையும், அனைத்து தரப்பு மக்களையும் கட்சியின் மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications