Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மார்க்சிஸ்ட் கம்யூ. குறி வைக்கும் தொகுதிகளின் லிஸ்ட்! 15-க்கு ஜம்ப்பாகும் சிபிஎம்! அப்போ காங்கிரஸ்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்த முறை கூடுதல் தொகுதிகளை கேட்டு பெற திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அது போல் அக்கட்சி 15 தொகுதிகளுக்கான உத்தேச பட்டியலையும் தயாரித்துள்ளதாம்.

இந்த உத்தேச பட்டியலை திமுகவுடனான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை நடத்தும் போது கொடுக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

CPI

தமிழக சட்டசபை தேர்தல் இன்னும் 2 மாதங்களில் நடக்க போகிறது. இந்த நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு, கூட்டணி பேச்சுவார்த்தை, எந்தெந்த தொகுதிகள், தேர்தல் அறிக்கை உள்ளிட்டவை குறித்த ஆலோசனைகளும் தயாராகி வருகின்றன.

பாமக ராமதாஸ்

அதிலும் பாமக ராமதாஸ், தேமுதிக, ஓபிஎஸ்ஸின் அதிமுக தொண்டர் உரிமை மீட்புக் கழகம் உள்ளிட்ட கட்சிகள் இன்னும் கூட்டணியை இறுதி செய்யாமல் இருக்கின்றன. இதற்கு காரணம் கூடுதல் தொகுதிகளை கேட்பதால் கூட்டணி தலைமை என்ன செய்வது என தெரியாமல் பேச்சுவார்த்தை இழுபறியில் நீடிக்கிறது.

திமுக கூட்டணி

அந்த வகையில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திமுகவுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராகி வருகிறதாம். கடந்த சில தினங்களுக்கு முன்பு மார்க்சிஸ்ட் கட்சியின் செயற்குழுக் கூட்டம் நடந்தது.

கூட்டணி தேர்தல்

இந்த கூட்டத்தில் தேர்தலுக்கான ஆயத்த பணிகள், திமுகவிடம் எந்தெந்த தொகுதிகளை கேட்டு பெறலாம் என்பதற்கான பட்டியலை தங்கள் நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்து பெற்றுள்ளனர்.

6 தொகுதிகள்

கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் 6 தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட்டது. கடந்த முறை கோவில்பட்டி, திருப்பரங்குன்றம், அரூர், திண்டுக்கல், கீழ்வேளூர், கந்தர்வக்கோட்டை ஆகிய 6 தொகுதிகளில் போட்டியிட்டது.

6 தொகுதிகளில் 2 வெற்றி

ஆனால் 6 தொகுதிகளில் கீழ்வேளூர், கந்தர்வக்கோட்டை ஆகிய இரு தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்றது. ஆனால் இந்த முறை திமுக கூட்டணியில் உள்ள சிபிஎம் கூடுதல் தொகுதிகளை கேட்க திட்டமிட்டுள்ளது. அதற்கேற்ப 15 தொகுதிகள் அடங்கிய உத்தேச பட்டியலை தயாரித்துள்ளது.

சென்னையில் ஒரு தொகுதி

சென்னையில் ஒரு தொகுதியை கேட்டு பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் திட்டமிட்டுள்ளது. அதிலும் குறிப்பாக சென்னையில் மதுரவாயல் அல்லது பெரம்பூர் தொகுதியைக் கேட்க திட்டமிட்டுள்ளது.

கேரள மாநில எல்லையில் ஒன்று

அது போல் ஏற்கெனவே வெற்றி பெற்ற கீழ்வேளூர், கந்தர்வக்கோட்டை ஆகிய தொகுதிகளையும் கேட்டு பெறவுள்ளதாம். கேரளா மாநில எல்லையில் உள்ள கன்னியாகுமரி மாவட்டத்தின் விளவங்கோடு அல்லது கிள்ளியூர் ஆகிய தொகுதிகளில் ஒன்றை கேட்க திட்டமிட்டுள்ளது.

மார்க்சிஸ்ட் கட்சி

மார்க்சிஸ்ட் கட்சி பலமாக இருக்கக் கூடிய திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் வடக்கு அல்லது தெற்கு தொகுதியை கேட்டு பெற முனைப்புடன் இருக்கிறதாம். மேலும் தொழில் நகரமான கோவையில் நிறைய தொழிற்சங்கங்கள் இருப்பதால் அங்கு மார்க்சிஸ்ட் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளதால் அங்கும் ஒரு தொகுதியை கேட்டு பெறலாம் என நிர்வாகிகள் கூறியுள்ளனராம்.

மதுரை மேற்கு

மதுரை மேற்கு அல்லது திருப்பரங்குன்றம், நன்னிலம், திண்டுக்கல் உள்ளிட்ட தொகுதிகள் அடங்கிய உத்தேச பட்டியலை தயாரித்துள்ளது. திமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை குழுவை அமைத்த பிறகு அந்த குழுவிடம் உத்தேச பட்டியலை கொடுக்கவும் திட்டமிட்டுள்ளனராம்.

மார்க்சிஸ்ட் கேட்ட தொகுதிகள்

மார்க்சிஸ்ட் கேட்ட தொகுதிகளான விளவங்கோடு, கிள்ளியூர் ஆகியவை காங்கிரஸின் கோட்டைகளாக உள்ளன. இவர்கள் கேட்டாலும் காங்கிரஸ் விட்டுக் கொடுக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அது போல் மதுரை மேற்கு தொகுதி தற்போது அதிமுகவின் கோட்டையாக இருந்து வருகிறது. கடந்த 2011 முதல் செல்லூர் ராஜு எம்எல்ஏவாக இருந்து வருகிறார். திமுகவிற்கும் அதிமுகவிற்கும் டஃப் பைட் நடக்கும் இடமாக இருக்கிறது.

திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதியும் அதிமுகவின் கோட்டையாக உள்ளது. அங்கு ராஜன் செல்லப்பா தற்போது எம்எல்ஏவாக உள்ளார். கடந்த முறை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பொன்னுதாய் என்பவர் போட்டியிட்டு 74,194 வாக்குகளை பெற்றார்.

நன்னிலம்

நன்னிலம் தொகுதியும் அதிமுகவின் எஃகு கோட்டை. இங்கு கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் எம்எல்ஏவாக உள்ளார். இங்கு ஒரு முறை போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வெற்றிபெறவில்லை. அப்படியிருக்க இந்த தொகுதியை எப்படி கேட்டது என தெரியவில்லை.

திருப்பூர் வடக்கு

திருப்பூர் வடக்கு தொகுதி பிரிக்கப்பட்டது முதல் அதிமுகதான் வென்று வருகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் கூட அதிமுகவுடன் போட்டியிட்ட கம்யூனிஸ்ட் (சிபிஐ) தோல்வி அடைந்துள்ளது. இங்கு 2011 ஆம் ஆண்டு போட்டியிட்டு வென்றுள்ளது. அதன் பிறகு 2016, 2021 ஆகிய தொகுதிகளில் திமுகவுக்கு ஒதுக்கப்பட்டது. அதில் 2016 இல் அதிமுகவும், 2021 இல் திமுகவும் வென்றுள்ளது.

சென்னை

சென்னையில் உள்ள பெரம்பூரில் 2001, 2006, 2011 ஆகிய ஆண்டுகளில் நடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கட்சி வென்றுள்ளது. ஆனால் அடுத்த தேர்தல்களில் அந்த தொகுதி திமுகவுக்கு ஒதுக்கப்பட்டது.

மதுரவாயல் தொகுதியில் 2011 ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் போட்டியிட்டு வென்றது. அதன் பிறகு அதிமுக, திமுக வென்றுள்ளது. கடந்த முறையே 6 தொகுதிகளில் 2ல் மட்டுமே வெற்றி பெற்ற நிலையில் தற்போது 15 தொகுதிகளை மார்க்சிஸ்ட் கேட்டுள்ளதை திமுக தலைமை பரிசீலனை செய்யுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+